என்ன செய்ய.. மமதாவிடம் தினமும் ஆதரவு கேட்கிறேன்.. ஒன்னும் முடிவு சொல்லலையே: பிரணாப் முகர்ஜி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜியிடம் தம்மை ஆதரிக்குமாறு தினமும் கோரிக்கை வைத்து வருவதாக குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினரை சந்தித்து தமக்கு ஆதரவு திரட்டினார் பிரணாப். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கவே இந்தச் சந்திப்புகளை நடத்துகிறேன். ஆதரவுக் கட்சிகளின் தலைவர்களையும் உறுப்பினர்களையும் மட்டுமே நான் சந்திக்கிறேன். ஜம்மு காஷ்மீர் என்ற இந்த அழகான மாநிலம் முழு வளங்களையும் பயன்படுத்தி வளர்ச்சி பெறவும் விரும்புகிறேன் என்றார்.

அவரிடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிடயிடம் ஆதரவு கேட்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு என்னை ஆதரித்து வாக்களிக்குமாறு மம்தாவிடம் நாள்தோறும் கோரிக்கை வைக்கிறேன். இது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் பிரணாப்.

முன்னதாக குடியரசுத் தலைவர் தேர்தலில் தம்மை ஆதரிக்குமாறு மமதாவுக்கு கடிதம் ஒன்றையும் பிரணாப் முகர்ஜி அனுப்பியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+