குவஹாத்தி இளம் பெண் மானபங்கம்... தூண்டி விட்டதாக கூறப்படும் டிவி நிருபர் ராஜினாமா!

Subscribe to Oneindia Tamil

Guwahati Molestation
குவஹாத்தி: குவஹாத்தியில் இளம் பெண்ணை 20 பேர் கொண்ட கும்பல் நடு ரோட்டில் வைத்து மானபங்கம் செய்த செயலை தூண்டி விட்டு அதை வீடியோவில் படமாக்கியதாக குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள நியூஸ்லைவ் டிவியின் செய்தியாளர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தன் மீதான புகாரை திட்டவட்டமாக மறுத்துள்ள அவர் இதுதொடர்பாக எத்தகைய விசாரணைக்கும் தான் தயார் என்றும் அறிவித்துள்ளார்.

அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில், ஜூலை 9ம் தேதி இரவு ஜி.எஸ்.சாலையில் 19 வயதான ஒரு இளம் பெண்ணை மடக்கிய 20க்கும் மேற்பட்ட ஆண்கள் அடங்கிய கும்பல் அப்பெண்ணை மிருகத்தனமாக மானபங்கம் செய்தது. ஆடைகளைக் கிழித்தும், சிகரெட்டால் சுட்டும் அவர்கள் வெறித்தனமாக நடந்து கொண்டனர். சிலர் அவரை பாலியல் பலாத்காரம் செய்யவும் முயற்சித்ததாக கூறப்படுகிறது.

நாடே அதிர்ந்து போகும் அளவுக்கு நடந்துள்ள இந்த சம்பவத்தை நியூஸ்லைவ் டிவியின் செய்தியாளர் கெளரவ் ஜோதி நியோக் கேமராவில் பதிவு செய்தார். சுமார் அரை மணி நேரம் அளவுக்கு இந்த காட்சி ஓடுகிறது. இதையடுத்து இவர்தான் இந்த வன்முறையைத் தூண்டி விட்டதாக ஒரு புகார் எழுந்துள்ளது.

ஜோதிதான், இந்த மானபங்கச் செயலைத் தூண்டி விட்டு அதை கேமராவில் பதிவு செய்தார். சம்பவம் நடந்தபோது அதைத் தடுக்கவோ, போலீஸுக்குத் தகவல் கொடுக்கவோ அவர் முயற்சிக்கவில்லை. எனவே இந்த கும்பலுடன் இவருக்குத் தொடர்பு இருப்பதாக அன்னா ஹஸாரே குழுவைச் சேர்ந்த ஆர்டிஐ சேவகர் அகில் கோகாய் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து அனைவரின் பார்வையும் ஜோதி மீது திரும்பியது. இதையடுத்து ஜோதி தனது நிருபர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 9ம் தேதி இரவு நடந்த சம்பவத்திற்கு நான்தான் காரணம், நான் தான் தூண்டி விட்டேன் என்று என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். இந்த சம்பவத்திற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

என் மீது எத்தகைய விசாரணை நடத்தப்பட்டாலும் அதை நான் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். விசாரணை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெற வகை செய்யும் விதத்தில்தான் எனது நிருபர் பதவியை துறந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஒரு பொறுப்பான பத்திரிக்கையாளராகத்தான் நான் நடந்து கொண்டுள்ளேன். எனது அலுவலத்திலிருந்து உடனடியாக வீடியோ கேமராமானை வரவழைத்தேன். அந்த மோசமான சம்பவத்தை உடனடியாக பதிவு செய்ய வைத்தேன். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட அத்தனை குற்றவாளிகளையும் அடையாளம் காண வீடியோ காட்சிகள்தான் உதவும் என்பதால் இவ்வாறு செய்தேன்.

விசாரணைக்கு நான் முழு வகையிலும் ஒத்துழைப்பேன். என் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய் என்று நிரூபித்து விட்டு, மீண்டும் பத்திரிக்கையாளர் பணியில் சேர்வேன் என்று கூறியுள்ளார்.

இது போக, அஸ்ஸாம் எலக்ட்ரானிக் மீடியா போரம் என்ற பத்திரிக்கையாளர் அமைப்பிலிருந்தும் விலகியுள்ளார் ஜோதி.

இதற்கிடையே, ஜோதிக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளதாக கூறி ஆர்டிஏ சேவகர் அகில் கோகாய் கொடுத்த வீடியோவில் ஜோதிக்கு உள்ள தொடர்புகளை நிரூபிக்கும் அளவுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்று அஸ்ஸாம் எலக்ட்ரானிக் மீடியா போரம் கூறியுள்ளது.

மேலும், ஜோதிக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இல்லை என்று தாங்கள் நம்புவதாக அவர் பணியாற்றி வரும் டிவி நிறுவனத்தின் செயல் இயக்குநர் நிதுமோனி சைக்கியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மானபங்கச் செயலில் ஈடுபட்ட ஒருவரையும் விடாமல் கைது செய்ய வேண்டும்.நாங்கள் யாரையும் பாதுகாக்கவோ, மறைக்கவோ முயலவில்லை என்றார்.

இதற்கிடையே நடந்த சம்பவத்தின் காட்சிகள் அடங்கிய வீடியோ தொகுப்பை இந்த டிவி சேனல் விரைவில் ஒளிபரப்பவுள்ளது. இதன் மூலம் தவறு செய்தவர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு காவல்துறைக்கு உதவ முடியும் என்று தாங்கள் நம்புவதாக டிவி நிறுவனம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+