தமிழக ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் விசா தர இந்திய தேசிய முஸ்லிம் லீக் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் விசா தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஜவஹர் அலி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

முஸ்லிம் மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவுக்கு மொத்தம் ஒன்றரை லட்சம் ஹஜ் விசாவை சவுதி அரேபிய அரசாங்கம் வழங்குகிறது.

மத்திய அரசு, மாநில வாரியாக முஸ்லிம் மக்கள்தொகைக்கு ஏற்ப இந்த விசாவை பிரித்து வழங்கவில்லை. தமிழகத்தை விட முஸ்லிம்கள் குறைவாக உள்ள கேரளாவுக்கு 12,000 விசாவும், கர்நாடகாவுக்கு 7,540 விசாவும், ஆந்திராவுக்கு 8,230 விசாவும் வழங்கியுள்ளது. ஆனால் தமிழகத்துக்கு 2,863 விசாக்களை மட்டுமே வழங்கியுள்ளது.

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள 12,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழக முதல்வரின் நடவடிக்கையால் கடந்த ஆண்டு 4,084 விசா கிடைத்தது. ஏற்கனவே ஹஜ் குழுவிற்கு வழங்கும் மானியத்தை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி உள்ளார்.

எனவே, தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று தமிழக முஸ்லிம் மக்கள்தொகைக்கு ஏற்ப இந்த ஆண்டு 10,000 விசாக்கள் வழங்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+