ஜுனியர் விகடன் மீது முதல்வர் ஜெயலலிதா 4வது முறையாக அவதூறு வழக்கு
சென்னை: முதல்வர் ஜெயலலிதா குறித்து தவறான செய்தி வெளியிட்டதாகக் கூறி ஜூனியர் விகடன் இதழ் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சென்னை மாநகர் அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் இருந்து வாரம் இருமுறை வெளியாகும் ஜூனியர் விகடன் பத்திரிக்கை 15.7.2012 தேதியிட்ட இதழில் கொடநாடு வந்த குஷி ராவணன் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளனர். அதில், எஸ்டேட்டின் சில பகுதிகள் ராவணனின் கட்டுப்பாட்டில் இருந்தாகவும், கடந்த சில தினங்களுக்கு முன்பு ராவணனை கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு வரவழைத்து, அவரது பிடியில் இருந்த இடங்களை முறையப்படி பெயர் மாற்றம் செய்தாதகவும் அதனால், அவர் பவ்யமாக வந்து முடித்துக் கொடுத்துவிட்டு நகர்ந்துள்ளார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், பங்களா அறை ஒன்றில் புதிய பெயரில் பத்திரத் தயாரிப்பு வேலைகள் நடந்தபோது ஜெயலலிதா அங்கு வரவில்லையாம். சசிகலா மட்டும் இன்டர்காமில் ராவணனிடம் இன்னும் சில விஷயங்கள் தொடர்பாகக் கட்டளை போட்டார் என்றும் சொல்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்தி முற்றிலும் தவறாகும். உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. ராவணன் மீது 4 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் தங்கியுள்ள கொடநாடு பங்களாவுக்கு ராவணன் செல்லவே இல்லை. முதல்வருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, அவதூறு செய்தி வெளியிட்ட ஜூனியர் விகடன் இதழ் ஆசிரியர் ரா.கண்ணன், வெளியீட்டாளர் கே.அசோகன், பதிப்பாளர் எஸ்.மாதவன் ஆகியோர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
ஜூனியர் விகடன் இதழ் மீது முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே மூன்று அவதூறு வழக்குகள் தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications