நித்தியானந்தாவுக்கு ஆண்மை இருக்கிறதா?... 30ம் தேதி 'டெஸ்ட்'!

கடந்த 2010ம் ஆண்டு நித்தியானந்தா பெரும் சர்ச்சையில் சிக்கினார். நடிகையுடன் அவர் அந்தரங்கமாக இருந்ததாக ஒரு வீடியோவை லெனின் கருப்பன் வெளியிட்டார். அதில் இருப்பது நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் என்று அவர் கூறினார். இதையடுத்து நித்தியானந்தா தலைமறைவானார். பின்னர் இமாச்சலப் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த அவரை கர்நாடக போலீஸார் பிடித்துக் கைது செய்து கொண்டு வந்து சிறையில் அடைத்தனர்.
போலீஸ் விசாரணையின்போது தான் ஆண்மையற்றவர் என்றும் தன்னால் உடலுறவில் ஈடுபட முடியாது என்றும் நித்தியானந்தா கூறினாராம். இதையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை, குரல் பரிசோதனை உள்ளிட்டவற்றை நடத்த கோர்ட்டிடம் அனுமதி வாங்கியது கர்நாடக போலீஸ். ஆனால் அந்த சோதனைகளுக்கு இதுவரை போகவில்லை நித்தியானந்தா.
இந்த நிலையில், ராமநகரம் கோர்ட்டில் சிஐடி சார்பில் நித்தியானந்தாவுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது. அதை ஏற்ற கோர்ட், இதுதொடர்பாக உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இதையடுத்து ஜூலை 30ம் தேதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் நித்தியானந்தாவுக்கு ஆண்மைப் பரிசோதனை உள்ளிட்டவை நடத்தப்படும் என்று கர்நாடக சிஐடி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அவருக்கும் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சோதனையின்போது விந்தனு பரிசோதனை, தைராய்டு சோதனை உள்ளிட்டவை நடத்தப்படும். இதில் நித்தியானந்தாவுக்கு ஆண்மை இல்லை என்பது உறுதியானால் அவர் வழக்கிலிருந்து விடுபடும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications