வங்கியிலிருந்து பணத்தைத் திருடி மார்பைப் பெரிதாக்கிய பலே பெண்!

Subscribe to Oneindia Tamil

Rachael Claire Martin
மாடல் அழகியாக விளங்க வேண்டும் என்பதற்காக தான் வேலை பார்த்து வந்த வங்கியிலிருந்து பணத்தைத் திருடி மார்புப் பெருக்கம், கொழுப்புக் கரைப்பு உள்ளிட்டவற்றுக்காக செலவழித்து சிக்கியுள்ளார் ஒரு பெண்.

24 வயதாகும் ரேச்சல் கிளேர் மார்ட்டின், பெர்க்ளேஸ் வங்கியில் பணியாற்றி வந்தார். அவருக்கு தான் ஒரு பெரிய மாடல் அழகியாக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இதற்காக தனது உடலை ஸ்லிம்மாக்கி மேலும் அழகைக் கூட்ட வேண்டும் என்ற ஆசை பிறந்தது. ஆனால் அதற்கெல்லாம் பெரிய அளவில் டப்பு தேவைப்படுமே... என்ன செய்யலாம் என்று யோசித்த அவர் தனது வங்கியிலேயே கையை வைத்து விட்டார்.

தான் வேலை பார்த்து வரும் வங்கியிலிருந்து 46 ஆயிரம் பவுண்டு பணத்தை ஆட்டையைப் போட்டார். அதன் பின்னர் பிளாஸ்டிக் சர்ஜரி, மார்பகப் பெருக்கம், கொழுப்புக் கரைப்பு, ஷாப்பிங் என்று தாறுமாறாக பணத்தை அள்ளி இறைத்தார். பற்களை சீரமைத்தார்,தலைமுடியை அழகாக்கினார். பின்னர் நைட் கிளப்களுக்குப் போய் பலரது கவனத்தையும் ஈர்க்க முயற்சித்தார். இப்போது மாட்டிக் கொண்டுள்ளார்.

கடந்த எட்டு வாரமாக கார்ன்வால் பகுதியில் உள்ள பெர்க்ளேஸ், வங்கியிலிருந்து சிறுக சிறுக பணத்தை திருடி வந்துள்ளார் ரேச்சல். இவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.

தனது இரு மார்பகங்களையும் பெரிதாக்குவதற்காக 4000 பவுண்டு பணத்தை செலவழித்துள்ளாராம் ரேச்சல். அதேபோல பற்களை சீரமைப்பதற்காக 1700 பவுண்டு பணத்தை எடுத்து விட்டுள்ளார். கரை படிந்த தனது பற்களை பளிச்சென நிறம் மாற்றவும் சிகிச்சை எடுத்துக் கொண்டாராம் இவர்.

மார்பகத்தைப் பெருக்கிக் கொண்ட பின்னர் எடுக்கப்பட்ட கவர்ச்சிகரமான படங்களை தனது ட்விட்டர் தளத்திலும் போட்டு வைத்துள்ளார். மேலும் இரு மார்புகளையும் ஓப்பனாக காட்டியபடியும் ஒரு போஸ் கொடுத்து வைத்துள்ளார்.

கைது செய்யப்பட்டு கோர்ட்டில் நிறுத்தப்பட்ட அவர் மீது 25 புகார்கள் கூறப்பட்டன. ஆனால் ஒன்றை மட்டுமே அவர் ஒப்புக் கொண்டார். தற்போது அவரை ஜாமீ்னில் விடுவித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு செப்டம்பர் மாதம் தண்டனை அளிக்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில், ரிஷோனா கார்லீன் டோன்ஸ் மற்றும் ரமோனா கார்லீன் ஆகிய இரு சகோதரிகளும், கிரெடிட் கார்டுகளைத் திருடி அதிலிருந்து 4000 பவுண்டு பணத்தை அபகரித்து, அதன் மூலம் தங்களது மார்புகளைப் பெருக்கும் சிகிச்சைக்குப் பயன்படுத்தினர் என்பது நினைவிருக்கலாம். அவர்களுக்கு கோர்ட்டில் தண்டனையும் விதிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+