அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!!

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் இந்தியில் கையெழுத்திட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் பாணியிலான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கேள்வி: தமிழகத்திலே உள்ள எல்.ஐ.சி. ஊழியர்கள் எல்லாம் வாரத்தில் ஒரு நாள் இந்தியில் கையெழுத்து கட்டாயமாக போட வேண்டுமென்று மத்திய அரசு ஆணை பிறப்பித்திருக்கிறதாமே?

பதில்: 29-6-2012 அன்று நடைபெற்ற அலுவலக மொழி நடைமுறைப்படுத்துதல் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, ஆயுள் காப்பீட்டுக் கழக, தென் மண்டல மேலாளர் (மனிதவள மேம்பாடு) ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார் என்றும், அதில் அனைத்து அலுவலர்களும், ஊழியர்களும் வாரத்தில் ஒரு நாள், குறிப்பாக திங்கள் கிழமைகளில் இந்தியில் கையெழுத்திட வேண்டும், கடிதங்கள் மற்றும் தகவல்களில் இந்தியில் கையெழுத்திட்டு, இந்தி மொழி தொடர்பு அதிகரிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சுற்றறிக்கைகளினால்தான் முன்பு இந்தி எதிர்ப்புப் போராட்டமே தொடங்கியது. நேரு இந்தி பேசாத மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டு மீண்டும் தேவையில்லாமல் இந்தியைத் திணிக்க எத்தனிப்பது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசு இதுபற்றி கவனித்து தக்க நடவடிக்கை எடுக்குமா என்பதே இப்போது நம்முன் உள்ள கேள்வி! நேருவின் வாக்குறுதியே நீர்மேல் குமிழியாவதா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

ஈழத் தமிழர் விவகாரத்தில் தனித் தமிழீழமே தீர்வு என்று பேசி டெசோ மாநாடு கூட்டுவதாக அறிவித்து கடைசியில் அந்தர் பல்டியாக டெசோ மாநாட்டில் தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம் என்றார் கருணாநிதி. பின்னர் மலேசியத் தமிழர்களுக்காகப் பேசினார். அதுவும் எடுபடவில்லை. எப்பவுமே திமுகவுக்கு வசதியான இந்தி திணிப்பு எதிர்ப்பை இப்பொழுது கையிலெடுத்திருக்கிறார். இதாவது ஒர்க் அவுட் ஆகுமா?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+