மனைவியுடன் சண்டை.. கள்ளக்காதலியும் கோபம்: விரக்தியில் விஷம் குடித்த செத்த வாலிபர்!
நாகர்கோவில்: மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக, கள்ளக்காதலி வீட்டுக்குப் போனார் வாலிபர். அங்கு கள்ளக்காதலியும் ஏன் வந்தாய் என்று கேட்டு விரட்டியதால் விஷம் குடித்துச் செத்துப் போனார்.
கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் மெல்பின். 30 வயதான இவர் ஹோட்டல் ஒன்றில் கேஷியராக இருந்து வந்தார். இவருக்கு ரீனா என்ற மனைவியு்ம், ஒரு குழந்தையும் உள்ளனர்.
அழகான மனைவி இருந்தாலும், மருதங்கோடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியுடன் தொடர்பு வைத்துக் கொண்டார் மெல்பின். அவருடன் அடிக்கடி சந்திப்பதும், நெருக்கமாக இருப்பதாகவும் போயுள்ளது மெல்பினின் இரட்டை வாழ்க்கை. இது மெல்பினின் மனைவிக்குத் தெரிய வரவே அவர் அதிர்ச்சி அடைந்தார். கள்ளத் தொடர்பை விடுமுறை தொடர்ந்து தனது கணவருடன் சண்டை போட்டு வந்தார்.
வழக்கம்போல சம்பவத்தன்றும் இரவு சண்டை நடந்துள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார் மெல்பின்.நேராகத தனது கள்ளக்காதலியான மாணவி வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டியுள்ளார். என்னதான் கள்ளக்காதலாக இருந்தாலும் நேரம் காலம் இல்லாமல் வீட்டுக்கு வருவதா என்று நினைத்த அந்த மாணவி திட்டி அனுப்பி விட்டார் மெல்பினை.
திரும்பிச் சென்ற மெல்பின் மீண்டும் வந்து கதவைத் தட்டியுள்ளார். மாணவியும் கதவைத் திறந்தார். அப்போது வாயில் நுரையுடன் கீழே விழுந்து கிடந்தார் மெல்பின். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மெல்பினை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், மெல்பின் ஆசிட் குடித்திருந்ததாக தெரிவித்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் அவர் உயிர் பிழைக்கவில்லை, இறந்து போனார்.


Click it and Unblock the Notifications
