நெல்லையப்பர் கோவிலில் ரூ.65 லட்சத்தில் சூரிய ஒளி மின்சார திட்டம்
நெல்லை: நெல்லையப்பர் கோவிலில் ரூ. 65 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை உபயமாக செயல்படுத்த உபயதாரர்கள் முன்வந்துள்ளனர்.
நெல்லையில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் 600 மின் விளக்குகள் வரை உள்ளன. இதனால் 2 மாதத்திற்கு ஒரு முறை ரூ.55,000 முதல் ரூ.60,000 வரை, திருவிழாக்காலங்களில் ரூ.75,000 முதல் ரூ.80,000 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மாதத்திற்கு 17,000 யூனிட் வரையிலும் மின்சாரம் செலவாகிறது. இவ்வளவு மின்சாரம் செலவாவதை கட்டுப்படுத்த சூரிய ஒளியினால் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை நெல்லையப்பர் கோவிலுக்கு ரூ. 65 லட்சம் செலவில் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஆதிசிவஞானம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த முருகேசன், முத்துக்குமார் ஆகியோர் உபயமாக செய்து தர முன்வந்துள்ளனர். இதற்கான அனுமதி கோரி நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்திடமும், அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த திட்டத்தின் மூலம் நெல்லையப்பர் கோவிலில் 2 மாதத்திற்கு ஒருமுறை செலவாகும் 17,000 யூனிட் மின்சாரத்தில் 80 முதல் 90 சதவீதம் வரை மிச்சமாகும். மேலும் ரூ.55,000ல் இருந்து ரூ.60,000 வரை செலுத்தப்படும் மின் கட்டணத்தில் 10 முதல் 20 சதவீதம் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.
அறநிலையத்துறை அனுமதி கிடைத்தவுடன் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நெல்லையப்பர் கோவிலில் செயல்படுத்தப்படும். மழைக்காலத்திலும் அதாவது 15 டிகிரி செல்சியசிலும் கூட 75 சதவீதம் மின் உற்பத்தி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications