சட்டசபை மனுக்கள் குழு இன்று தூத்துக்குடியில் ஆய்வு: திமுக, தேமுதிக பங்கேற்குமா?
தூத்துக்குடி: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று தமிழக அரசின் மனுக்கள் குழுவிற்கு அனுப்பப்பட்ட மனுக்களை ஆய்வு செய்கின்றனர். இதில் திமுக, தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக சட்டசபை பேரவை 11வது மனுக்கள் குழு கடந்த மே மாதம் 19ம் தேதி நியமனம் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 10.30 மணி்க்கு கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே மனுக்கள் குழுவிற்கு பொதுமக்கள் அளித்த மனுக்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. சங்கராபுரம் அதிமுக எம்.எல்.ஏ.வும், அரசு தலைமை கொறடாவுமான மோகன் குழுவின் தலைவராகவும், உறுப்பினர்களாக எம். எல்.ஏ.க்கள் மயிலாடுதுறை அருள்செல்வன்(தேமுதிக), திருத்துறைப்பூண்டி உலகநாதன்(இந்திய கம்யூனிஸ்ட்), உத்திரமேரூர் கணேசன்(அதிமுக), மொடக்குறிச்சி கிட்டுச்சாமி(அதிமுக), செங்கம் சுரேஷ்குமார்(தேமுதிக), தாராபுரம் பொன்னுச்சாமி(அதிமுக),நிலக்கோட்டை ராமசாமி(புதிய தமிழகம்), மன்னார்குடி ராஜா(திமுக), சங்ககிரி விஜயலட்சுமி பழனிச்சாமி(அதிமுக),
திண்டிவனம் ஹரிதாஸ் (அதிமுக), சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன், துணைச் செயலாளர் இந்துமதி, சார்பு செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இன்றைய கூட்டத்தில் இந்த குழுவில் எத்தனை பேர் பங்கேற்கிறார்கள் என்பது தெரியவில்லை. தலைவர் மற்றும் பேரவை செயலக செயலாளர்கள் மற்றும் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் பங்கேற்பார்கள். ஆனால் திமுக, தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பார்களா என்று தெரியவில்லை.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்!












Click it and Unblock the Notifications