ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: மீண்டும் மீண்டும் ஒத்திவைப்பு
பெங்களூர்: பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி. சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜூலை 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி மல்லிகார்ஜுனையா நியமனம் செய்யப்பட்டதை முறைப்படி அரசு ஆணையாக வெளியிடவில்லை என்று கூறி ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனையா, சிறப்பு நீதிபதி நியமனத்தில் சட்ட விதிகள் மீறப்படவில்லை என்று தீர்ப்பளித்தார். மேலும், வழக்கு விசாரணையை ஜூலை 24ம் தேதிக்கு (நேற்றைக்கு) ஒத்திவைத்தார். அன்றைய தினம் (நேற்று) 313-வது விதியின் கீழ் சசிகலா உள்ளிட்டோர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர்கள் குமார், கந்தசாமி, மணிசங்கர், அசோகன் ஆகியோர் ஆஜராகி ஒரு மனு தாக்கல் செய்தனர்.
அதில் சிறப்பு நீதிபதி நியமனத்தில் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளன. இது குறித்து சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி நிராகரித்துள்ளார். எனவே, பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜூலை 23) மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை இன்னும் ஒரு வார காலத்திற்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கு அரசு உதவி வழக்கறிஞர் சந்தேஷ் சவுடா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கு விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்கின்றனர். இதற்கு முன்பு அவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மேல் கோர்ட்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கின்றன. எனவே, அதை கருத்தில் கொள்ளாமல் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் வாங்கும் பணிகளை தாமதமின்றி தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, வழக்கு விசாரணையை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
-
நடிகர் கார்த்திக் இதுக்குதான் வர்றாரா? போயஸ் கார்டனில் இருந்து அந்த "உத்தரவு".. அலறிய முக்கிய கட்சி -
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்












Click it and Unblock the Notifications