போலிச் சான்றிதழ் விவகாரம்: உடன்குடி பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு
தூத்துக்குடி: போலிச் சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் உடன்குடி ஸ்ரீராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், செயலாளர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தேரியூர் ஸ்ரீராம்கிருஷ்ணர் சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் ஜெயா என்ற பெண் எழுத்தராக பணி புரிந்தார். ஆனல் அவர் அந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியதாக பள்ளி நிர்வாகத்திடம் இருந்து போலிச் சான்றிதழ் பெற்று கடந்த 2006ம் ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் நடத்திய ஆசிரியர் நுழைவுத் தேர்வை எழுதினார். இது தொடர்பாக உடன்குடி அருகே உள்ள சுந்தரபுரத்தைச் சேர்ந்த சுடலைமணி என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் மூன்று வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தூத்துக்குடி எஸ்.பி. மற்றும் குலசேகரபட்டணம் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.
ஆனால் 7 ஆண்டுகள் ஆகியும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் சுடலைமணி திருச்செந்தூர் நீதிமன்றத்தில் மதுரை உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவை மேற்கோள் காட்டி வழக்கறிஞர் ஜேசுராஜ் என்பவர் மூலம் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், உடன்குடி ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்பட்ட போலிச் சான்றிதழ் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவை 7 ஆண்டுகள் ஆகியும் போலீசார் செயல்படுத்தவில்லை. எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு குலசேகரப்பட்டிணம் போலீசாருக்கு கடந்த மே மாதம் 17ம் தேதி உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி செயலாளர் திவ்யானந்தா, தலைமை ஆசிரியர் சபாபதி மற்றும் போலிச் சான்று பெற்றதாக கூறப்படும் பெண் ஜெயா ஆகியோர் மீது குலசேகரபட்டிணம் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications