சென்னையில் ப.சிதம்பரம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்-100 அன்னா ஆதரவாளர்கள் கைது
சென்னை: சென்னையில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
வலுவான லோக்பால் மசோதா வேண்டியும், ஊழலுக்கு எதிராகவும் அன்னா குழுவினர் கடந்த 25ம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அன்னா ஹசாரேவும் இன்று தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கியுள்ளார். அவரது குழுவினர் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தபோது காற்று வாங்கிய ஜந்தர் மந்தர் மைதானத்தில் இன்று மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இதற்கிடையே அன்னா ஆதரவாளர்கள் அதாவது இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த 100 பேர் அதன் ஒருங்கிணைப்பாளர் ராதிகா கணேஷ் தலைமையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அவர்கள் அங்கேயே அமர்ந்து கொண்டு 15 ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ப.சிதம்பரம் உறுதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்தனர்.
மத்திய அமைச்சர்களில் 15 பேர் ஊழல்வாதிகள் என்று அன்னா குழுவினர் குற்றம்சாட்டியுள்ளனர். அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோருக்கு எதிராக ஊழல் ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications