திமுக நிர்வாகி எஸ்.டி.உகம்சந்த் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: விவசாய நிலத்தில் மணல் திருடியது தொடர்பாக விசாரணை நடத்தி திமுக நிர்வாகி எஸ்.டி. உகம்சந்த் மீது 6 வாரத்திற்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு நகர அதிமுக மாணவர் அணி துணைத் தலைவர் என்.சம்பத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
மதுராந்தகம் திமுகவைச் சேர்ந்த எஸ்.டி. உகம்சந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் சுந்தரராஜன், திருவேங்கடம் ஆகியோர் விவசாய நிலத்தில் 7,000 லாரிகளுக்கு மேல் மணல் திருடியுள்ளார். அதன் இன்றைய மதிப்பு ரூ.2 கோடியே 50 லட்சம் ஆகும்.
இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக ஆட்சியில் நாங்கள் எல்லாம் எவ்வளவோ போராடியும் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அதன் பிறகு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு நாங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் எஸ்.பி.யிடம் மனு கொடுத்தோம். அதன் பிறகு தான் எங்களுக்கு உண்மை நிலைமை தெரிய வந்தது.
திமுக ஆட்சியில் எஸ்.டி உகம்சந்த் பண பலம் மற்றும் அதிகார பலத்தைப் பயன்படுத்தி பல முறைகேடுகள் செய்துள்ளார். இது குறித்த வழக்கை கடந்த 1.10.2009 அன்று எங்களுக்குத் தெரியாமல் முடித்துவிட்டனர். பிறகு நாங்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி திமுக நிர்வாகி எஸ்.டி.உகம்சந்த் மீது 6 வாரத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications