பஞ்சாப்பில் பள்ளி பஸ் மீது உள்ளூர் ரயில் மோதி 4 மாணவிகள் பலி-19 பேர் காயம்
அமிர்தசரஸ்:அமிர்தசரஸ் அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற பஸ் மீது, உள்ளூர் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 4 பள்ளி மாணவிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினார். மேலும் 19 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸை அடுத்த கோட் மெஹ்தாப் சிங் கிராமத்தில் பியாஸ் என்ற ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் அருகே ஆளில்லாத ரயில்வே கிராசிங் ஒன்று உள்ளது.
இன்று காலையில் பாபா பாக்லா நகரை சேர்ந்த சந்த் பாபா மஜாசிங் கரம்ஜோத் மார்டன் பள்ளியில் படிக்கும் 23 குழந்தைகளை ஏற்றி கொண்டு பள்ளி பஸ் பியாஸ் ரயில் நிலையத்தை அடுத்துள்ள ஆளில்லாத ரயில்வே கிராசிங்கை கடந்தது.
அப்போது ஒரே ஒரு பெட்டியுடன் அந்த வழியாக வந்த உள்ளூர் ரயில், பள்ளி பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சில் பயணித்த 4 பள்ளி குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த குழந்தைகள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இறந்த 4 பேரும் மாணவிகள் என்று தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், விபத்தில் சிக்கிய பஸ்சில் 12 முதல் 14 வயது கொண்ட பள்ளி மாணவ, மாணவியர் பயணித்தனர். உள்ளூர் ரயில் வழக்கத்திற்கு மாறாக வேகமாக வந்ததால் விபத்து நேர்ந்துள்ளது என்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications