நடிகர்-நடிகைகளுக்கு ரசிகர் மன்றம் வைக்காதீங்க: ராமதாஸ்
திருவண்ணாமலை: நடிகர், நடிகைகளுக்கு ரசிகர் மன்றம் எல்லாம் வைக்காதீர்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தேரடியில் வந்தவாசி சட்டசபை தொகுதி பாமக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது,
தமிழகத்தை இதுவரை வன்னியர்கள் ஆளவில்லை. அவர்களிடம் ஒற்றுமையில்லாததால் தான் அவர்களால் ஆட்சிக்கு வர முடியவில்லை என்றனர். இப்போது நாம் ஒறுறமையாக உள்ளோம். எனவே நாம் ஆட்சிக்கு வர வேண்டும்.
இம்முறை நாம் ஆட்சிக்கு வந்தே ஆகணும். அதற்காக நமது இளைஞர்கள் எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ளனர். நம் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் மாம்பழ சின்னத்திற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் அரசியல் கட்சிகள் தான். ஆனால் அவற்றில் யாருமே வன்னியரைப் பற்றி நினைத்ததும் கிடையாது, பேசியதும் கிடையாது.
சினிமா பாருங்கள் ஆனால் அடிமையாகிவிடாதீர்கள். நடிகர், நடிகைகளுக்கு ரசிகர் மன்றங்களை வைக்காதீர்கள்.
தமிழகத்தை கடந்த 45 ஆண்டுகளாக ஆண்ட திமுகவும், அதிமுகவும் நினைத்திருந்தால் வறுமையே இல்லாமல் செய்திருக்கலாம். ஆனால் அவர் செய்தார்களா, இல்லையே. மாறாக இலவசங்களை கொடுக்கிறோம் என்று மாக ஆடு, மாடு வழங்குகிறார்கள். வன்னியர்களுக்கு அனைத்து துறைகளிலும் 20 சதவீத ஒதுக்கீடு கோரி வட்டாட்சியர் மற்றும் கலெக்டர் அலுவலகம் முன்பு வரும் செப்டம்பர் மாதம் 17ம் தேதி போராட்டம் நடத்தப்படும்.
இதையடுத்து வரும் டிசம்பரில் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும். அப்போது நான் 4 மதுக்கடைகளுக்கு பூட்டு போடுவேன். 2016ல் ஆட்சியைப் பிடிப்போம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications