ஜனார்த்தன் ரெட்டி ஜாமீனுக்கு ரேட் பிக்ஸ் செய்த விவகாரம்- கர்நாடக எம்.எல்.ஏ. கைது
ஹைதராபாத்: கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டிக்கு ஜாமீன் பெற நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ்பாபுவை ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்புப் போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஓபுலாபுரம் சுரங்க முறைகேடு தொடர்பாக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி கைது செய்யப்பட்டார். அவர் ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் பெறுவதற்காக நீதிபதி பட்டாபிராம ராவுக்கும் மேலும் சிலருக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பட்டாபிராம ராவ் மற்றும் 3 நீதிபதிகள் உள்பட 8 பேரை ஆந்திர லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்
இந்த வழக்கில் தொடர்புடைய கர்நாடக எம்.எல்.ஏ. சுரேஷ்பாபுவைத் தங்கள் முன் ஆஜராகும்படி அவர்கள் கடந்த 24-ம் தேதி நோட்டீஸ் அனுப்பினர். இதையடுத்து அவர் நேற்று ஆஜரானார். அவரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்குப் பிறகு அவரை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications