ஆடிதபசு திருவிழா: சங்கரன்கோவிலில் குவியும் பக்தர்கள்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் ஆடிதபசு திருவிழாவையொட்டி அங்கு பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஆடிதபசு திருவிழா கடந்த 22ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை அம்பாள் பல்வேறு அலங்காரத்தில் தவக்கோலத்தில் எழுத்தருளி வீதியுலா வருகிறார். இரவில் மண்டகப்படிதாரர் சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் அம்பாள் வீதியுலா, கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
திருவிழாவின் 9வது நாளான நேற்று அம்பாள் தேரோட்டம் நடந்தது. இதில் திராளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். காலையில் அம்பாள் முளைப்பாரி எடுத்தல் அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தபசு காட்சி 11ம் திருநாளான நாளை (1ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி காலையில் கோவில் பிரகாரத்தில் அம்பாள், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.
மாலை 5 மணிக்கு சுவாமி சங்கரநாராயணராக வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதி தபசு பந்தலை அடைந்ததும் மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் தபசு காட்சி நடைபெறுகிறது. தொடர்நது இரவு 11 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி சங்கரலிங்கராக வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி இரவு 12 மணிக்கு தெற்கு ரதவீதியில் அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் இரண்டாம் தபசு காட்சி நடைபெறுகிறது.
தபசு காட்சியை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சங்கரன்கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. நெல்லை எஸ்.பி. விஜயேந்திர பிதாரி உத்தரவி்ன்பேரில் டிஎஸ்பி கலிபுல்லா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications