வேளாங்கண்ணி திருவிழாவிற்கு செல்ல சிறப்பு ரயில்கள்-தெற்கு ரயில்வே அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேளாங்கண்ணி மாதா சர்ச் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது.

தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பிரபலமானது வேளாங்கண்ணி மாதா ஆலயம். இங்கு நடைபெறும் திருவிழாவிற்கு வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, வெளி நாட்டினரும் வந்து செல்கின்றனர். இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 29ம் தேதி முதல் 8ம் தேதி வரை வேளாங்கண்ணி திருவிழா நடைபெற உள்ளது.

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு, ஆண்டு தோறும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் இயக்க போவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

கூட்ட நெரிசல் மற்றும் திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணிக்கு மும்பை தாதர் மற்றும் லோக்மான்யா திலக் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

லோக்மான்யா திலக்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. லோக்மான்யா திலக்கில் இருந்து ஆகஸ்ட் 25ம் தேதி பகல் 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்.01041) மறுநாள் இரவு 9.45 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடைகிறது.

மற்றொரு மார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து லோக்மான்யா திலக்கிற்கு ஆகஸ்ட் 27ம் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (01042) 29ம் தேதி காலை 10.30 மணிக்கு லோக்மான்யா திலக்கை சென்றடைகிறது.

இதேபோல் லோக்மான்யா திலக்கில் இருந்து ஆகஸ்ட் 26ம் தேதி பகல் 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (01043) மறுநாள் இரவு 9.45 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடைகிறது.

மற்றொரு மார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து லோக்மான்யா திலக்கிற்கு ஆகஸ்ட் 28ம் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (01044) 30ம் தேதி காலை 10.30 மணிக்கு லோக்மான்யா திலக்கை சென்றடைகிறது.

மும்பை தாதர்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மும்பை தாதரில் இருந்து ஆகஸ்ட் 27ம் தேதி பகல் 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (01045) மறுநாள் இரவு 9.45 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடைகிறது.

எதிர் மார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 29ம் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (01046) 31ம் தேதி காலை 10 மணிக்கு மும்பை தாதரை சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை துவங்குகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+