கரூர் அருகே கல்லூரி வாகனம் மோதி 10ம் வகுப்பு மாணவி பலி
கரூர்: கரூர் அருகே சைக்கிளில் பள்ளிக்கு சென்ற 10ம் வகுப்பு மாணவி மீது கல்லூரி வாகனம் மோதியதில் அவர் பலியானார்.
கரூர் அருகே காந்திகிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தவர் பத்மாவதி. அவர் காலையில் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கரூர் பாலிடெக்னிக் கல்லூரி வாகனம் அவரின் சைக்கிளில் மோதியது. இதில் பத்மாவதி படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த வாரம் தான் வேலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் பள்ளி வாகனத்தில் அடிபட்டு 2 மாணவிகள் இறந்தனர். நேற்று சென்னையில் பள்ளி வேனில் சிக்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை இறந்தது. இதையடுத்து கரூரில் கல்லூரி வாகனத்தில் அடிபட்டு பள்ளி மாணவி பலியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி, கல்லூரி வாகனங்கள் மாணவ, மாணவிகளின் உயிரை வாங்கும் வாகனங்களாக மாறி வருகின்றன.












Click it and Unblock the Notifications