அதிமுகவில் இருந்து 50 எம்.எம்.எல்.ஏக்கள் விலகி வருவதாக சொன்னார்கள்: விஜயகாந்த்
சென்னை: அதிமுகவில் இருந்து கூட 50 எம்.எம்.எல்.ஏக்கள் விலகி வருவதாக சொன்னார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
கேள்வி: அதிமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிறது. இந்த ஆட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எவ்வளவு மார்க் போடுவீர்கள்?
பதில்: எதிர்கட்சி தலைவரே இல்லை என்று கூறுகிறார்கள். பிரதான எதிர்கட்சி என்று தயவு செய்து சொல்லாதீர்கள். பிரதான எதிர்க்கட்சி நான் கிடையாது. நாங்கள்தான் பிரதான எதிர்கட்சி என்று முதல்வரே சொல்வது இல்லை. (எல்லாம் சொன்னவர் மார்க் போடவே இல்லை)
கேள்வி: டாக்டர் ராமதாஸ் தேமுதிகவை ரசிகர் மன்ற கட்சி என்று கூறியிருக்கிறாரே?
பதில்: முதலில் பாமகவை வளர்ப்பதற்கு போராடச் சொல்லுங்கள்.
கேள்வி: தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் அ.தி.மு.கவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே?. இதனால் அவர்கள் அமைதியாக இருப்பதாகவும் சொல்கிறார்களே..
பதில்: அமைதியாக இருந்தால் என்ன? உங்கள் பாக்கெட்டில் கையை வைத்து காசு எடுக்கவில்லையே.. அதிமுகவில் இருந்து கூட 50 எம்.எம்.எல்.ஏக்கள் விலகி வருவதாக சொன்னார்கள். காங்கிரஸ் கட்சியில் பிரணாப் முகர்ஜிக்கு ஓட்டுப் போடாமல் மாற்றி ஓட்டுப் போடப்போவதாக சொன்னார்கள். இதற்கு என்ன சொல்கிறீர்கள்.
கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் போது கூட்டணியில் மாற்றம் வருமா?
பதில்: யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. தமிழ்நாட்டுக்கு நல்லது செய்யும் அரசாங்கம் வந்தால் நாங்கள் கூட்டணி சேரக் கூடாதா?
கேள்வி: திமுக நடத்தும் டெசோ மாநாடு குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: இலங்கையில் இருக்கின்ற தமிழர்கள் எல்லாம் செத்த பிறகு டெசோ மாநாடா?.
பிரபாகரன் உயிரோடு இருந்தபோதே இலங்கை தமிழர்களை கருணாநிதி காப்பாற்றவில்லை. இனிமேல் டெசோ மாநாடு நடத்தி இலங்கை தமிழர்களை காப்பாற்ற போகின்றார்களாம். தனி ஈழம் அடைந்தே தீருவேன் என்று கருணாநிதி கூறினார். 4 நாட்களுக்கு பிறகு தனி ஈழம் குறித்து டெசோ மாநாட்டில் பேச மாட்டேன் என்று கூறுகிறார். நான் இப்படி எல்லாம் பேச மாட்டேன்.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.












Click it and Unblock the Notifications