விஜயகாந்த்துக்குப் பயம் வந்து விட்டது.. கே.என்.நேரு

Subscribe to Oneindia Tamil

K N Nehru
திருச்சி: எங்கே தனது கட்சிக்கு உள்ள எதிர்க்கட்சி அந்தஸ்து பறிபோய் விடுமோ என்று பயப்பட ஆரம்பித்து விட்டார் விஜயகாந்த். இதனால்தான் திமுகவை எதிர்த்துப் பேச பயப்படுகிறார். சட்டசபைக்குப் போகப் பயப்படுகிறார். அங்கு ஏதாவது பேசினால், தனது கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் அதிமுகவுக்குப் போய் விடுவார்களோ என்று பயப்படுகிறார் என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு.

திருச்சியில் நடந்த திமுக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,

கடந்த திமுக ஆட்சியில், விஜயகாந்த் திமுகவைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் விஜயகாந்த், விமர்சனம் செய்ய பயப்படுகிறார். சட்டமன்றத்திற்குப் போகவே பயப்படுகிறார். ஏதாவது எதிர்த்துப் பேசினால் 10 எம்எல்ஏக்கள் கட்சி மாறி, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து போய்விடும் என பயந்து பேசாமல் இருக்கிறார். அதனால் பேசவே பயப்படுகிறார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சொன்தைப்போல உண்மையான எதிர்க்கட்சி மக்கள் மன்றத்தில் திமுகதான்.

தமிழ் ஈழத்துக்கான டெசோ மாநாடு குறித்து கலைஞர் அறிவிப்பு வெளியான உடன், தமிழ்நாட்டில் ஈழ ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வைகோ, சீமான், நெடுமாறன் ஆகியோர் கலைஞரை பற்றி கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்.

என்ன காரணம் என்றால் இதுநாள் வரையும் ஈழத்தமிழர்களைப் பற்றி பேசி கட்சி நடத்தினார்கள். ஆனால் இப்போது டெசோ மாநாட்டில் கலந்துகொள்ள உலகலாவிய ஈழ தமிழ் ஆதரவாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அதனை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கலைஞர் நடத்தும் மாநாட்டில் லட்சக்கணக்கில் தமிழர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதனால் ஈழதமிழர்களுக்கான ஆதரவு பெருகும். இந்த ஆதரவு கலைஞர் மூலம் நடப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால்தான் அவர்கள் குதிக்கிறார்கள். அவர்களால் இதுபோன்ற மாநாட்டை நடத்த முடியாது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+