இங்கிலாந்து ராணியைப் பார்க்க 6800 டாலர் டாப்ஸ் போட்டுச் சென்ற மிஷல் ஒபாமா!

Subscribe to Oneindia Tamil

Michelle Obama
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவுக்கு வந்திருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷல், இங்கிலாந்து ராணி எலிசபெத்தைப் பார்க்கப் போனபோது 6800 டாலர் மதிப்பிலான படு காஸ்ட்லியான டாப்ஸ் போட்டுக் கொண்டு சென்றது சர்ச்சையாகியுள்ளது.

இப்படியா மிஷல் ஆடம்பரமாக செலவழிப்பார் என்று ஒபாமாவைப் பிடிக்காதவர்கள் பொறணி பேச ஆரம்பித்துள்ளனராம்.

முற்றிலும் எம்பிராய்டரி செய்யப்பட்ட வெள்ளை நிற டாப்ஸில் மிஷல் ஒபாமா பட் க்யூட்டாக தேவதை போலக் காணப்பட்டாலும் கூட இவ்வளவு விலை உயர்ந்த டிரஸ் தேவையா என்று கேள்விகள் எழுந்துள்ளன.

ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு முன்னதாக பக்கிங்காம் அரண்மனைக்கு ராணியைப் பார்க்கப் போனபோதுதான் இந்த டிரஸ்ஸுடன் போயிருந்தார் மிஷல்.

அமெரிக்காவில் பலர் பொருளாதார ஏற்றத்தாழ்வால் பாதிக்கப்பட்டு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் நிலையில் மிஷல் இவ்வளவு காஸ்ட்லியான டாப்ஸ் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது என்றும் அமெரிக்காவில் பேச்சு கிளம்பியுள்ளது.

மிஷல் தனது டாப்ஸுக்காக செய்த செலவானது, ஒரு சாதாரண அமெரிக்கர் சராசரியாக மாதம் ஒன்றுக்கு செலவழிக்கும் தொகையாகும் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+