பார்க்க வராத நண்பரை போட்டு உதைத்த 2 அரவாணிகள்...!
அகமதாபாத்: தங்களை முன்பு போல அடிக்கடி பார்க்க வராத நண்பர் மீது கோபம் கொண்ட இரண்டு அரவாணிகள், அவரை சரமாரியாக அடித்து உதைத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து அடிபட்ட நபர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
குஜராத் மாநிலம் கட்லோடியா காவல் நிலையத்தில் 33 வயதான ஹிமன்ஷு படேல் என்பவர் ஒரு புகார் கொடுத்தார். அதில், பிரஞ்சால் தே மற்றும் ஜோதி தே என்ற இரு அரவாணிகளும், அவர்களது நண்பர் ஒருவரும் சேர்ந்து தன்னை அடித்து உதைத்து விட்டதாகவும், பணத்தைப் பறித்துச் சென்று விட்டதாகவும் படேல் கூறியிருந்தார்.
ஏன் இந்த அடிதடி....?
மணிநகர், ஆனந்த் சொசைட்டி பகுதியைச் சேர்ந்தவர் படேல். இவருக்கும், இந்த இரு அரவாணிகளுக்கும் இடையே நீண்ட காலமாக நெருங்கிய நட்பு இருந்து வந்ததாம். பட்டதாரியான படேல், காந்தி சாலையில் ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த இரு அரவாணிகளையும் தினசரி போய் பார்த்து விட்டு சந்தோஷமாக பேசி விட்டு வருவாராம். அதேபோல இந்த அரவாணிகளுக்கும், படேலைப் பார்க்காமல் இருக்க முடியாதாம்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இரு அரவாணிகளையும் படேல் போய்ப் பார்க்கவில்லையாம். இதனால் அரவாணிகள் இருவரும் வருத்தமடைந்தனர். ஏன் நம்மை படேல் பார்க்கவில்லை என்று குழப்பமடைந்தனர் அவர்கள்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், கட்லோடியாவில் நடந்த ஒரு கோவில் விழாவுக்குப் போயிருந்தார் படேல். அங்கு அந்த இரு அரவாணிகளும், அவர்களது இன்னொரு நண்பருடன் வந்திருந்தனர். படேலைப் பார்த்ததும் பாய்ந்து வந்தனர் அரவாணிகள். ஏன் எங்களைப் பார்க்க வருவதே இல்லை என்று கோபத்துடன் கேட்டனர். அதற்கு எதையோ காரணமாக சொன்னார் படேல்.
இதையடுத்து அருகில் உள்ள ஒரு கோவிலில் நடக்கும் விழாவுக்கு எங்களுடன் வாயேன் என்று அரவாணிகள் அழைத்துள்ளனர். ஆனால் படேல் வர முடியாது என்று கூறியுள்ளார். ஆனால் அவரைக் கட்டாயப்படுத்தி தாங்கள் வந்த காரில் கூட்டிப் போயுள்ளனர். வழியிலேயே படேலை மூன்று பேரும் சரமாரியாக அடித்து உதைத்தார்களாம். பின்னர் அவர் வைத்திருந்த ரூ. 5000 பணத்தையும் பறித்துக் கொண்டு கீழே தள்ளி விட்டு விட்டனராம்.
எங்களை ஏன் பிடிக்கவில்லை, ஏன் பார்க்க வருவதில்லை என்று கேட்டு கேட்டு அரவாணிகள் தன்னை அடித்ததாக போலீஸாரிடம் படேல் கூறியுள்ளார்.
புகாரை வாங்கியுள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications