தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தீவிபத்துக்கு சதி வேலை காரணமல்ல-தடவியல் நிபுணர்கள்
ஹைதராபாத்: தமிழ்நாடு எக்ஸபிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்துக்கு சதி வேலை காரணமல்ல என்று தெரிய வந்துள்ளதாக ஹைதராபாத் தடயவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்த இந்த ரயில் நெல்லூரில் அதிகாலையில் தீவிபத்துக்குள்ளானது. ரயிலின் எஸ் 11 பெட்டியில் ஏற்பட்ட தீ அந்தப் பெட்டியையே கபளீகரம் செய்து விட்டது. இதில் சிக்கி 28 பேர் உயிரிழந்தனர்.
இந்த தீவிபத்து எதனால் ஏற்பட்டது என்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவின. வெடிச் சத்தம் கேட்டதாக பயணிகள் சிலர் தெரிவித்திருந்தனர். அதேசமயம், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக சிலர் கூறியிருந்தனர். செல்போன் சார்ஜர் வெடித்ததால் தீவிபத்து ஏர்பட்டதாக சிலர் கூறியிருந்தனர். நக்சலைட் சதி வேலை காரணமா என்ற சந்தேகமும் எழுந்தது.
இதுகுறித்து ஹைதராபாத்திலிருந்து தடயவியல் நிபுணர்கள் நெல்லூர் வந்து சம்பந்தப்பட்ட பெட்டியில் ஆய்வு நடத்தினர். அப்போது ரயில் பெட்டியில் வெடிகுண்டு எதுவும் வெடித்திருக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கண்டறிந்தனர். காரணம், வெடிபொருள் வெடித்திருந்தால் ரயில் பெட்டி உருக்குலைந்து போயிருக்கும். ஆனால் அப்படி எதுவு் நடக்கவில்லை. ரயில் பெட்டி முழுவதும் தீப்பிடித்து எரி்ந்துள்ளது. ஆனால் வெடி சிதறல்கள் ஏதும் பெட்டியில் இல்லை. எனவே நிச்சயம் நாச வேலைக்கு வாய்ப்பில்லை என்று தடயவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தடயவியல் நிபுணரான மூ்ர்த்தி கூறுகையில்,
ரயில் பெட்டியில் வெடிச் சம்பவம் ஏற்பட்டதற்கான அடையாளம் இல்லை. எங்கள் நிபுணர்கள் ஆய்வு நடத்தியதில் எந்த வெடி பொருள் தடயமும் சிக்கவில்லை. எனவே வேறு காரணங்களால் தீப்பிடித்து இருக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறோம் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், மின்சாரம், பேட்டரி இணைப்புகள், ஒயர்களில் உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அவர் கூறினார்.
இதற்கிடையே, மத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சிங் தலைமையிலான ஒரு குழு நாளை நெல்லூர் சென்று ரயில் பெட்டியைப் பார்வையிட்டு விசாரணை நடத்தவுள்ளது.












Click it and Unblock the Notifications