விஜய்காந்த் 'டூர்' ஆரம்பம்.. திருநங்கைகள் முதல் கைதிகள் குடும்பத்தினர் வரை அனைவருக்கும் உதவி!

இந்தப் பயணத்தின்போது சுமை தூக்கும் தொழிலாளர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், கோவில்கள், உலமாக்கள், சர்ச்சுகள், சமையல் கலைஞர்கள், கட்டிட தொழிலாளர்கள், விவசாயிகள், துப்புரவுத் தொழிலாளர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், ஆட்டோ-மாட்டுவண்டி ஓட்டுபவர்கள், முதியோர், தேயிலை தொழிலாளர்கள், திருநங்கைகள், கைதிகளின் குடும்பத்தினர் என பலதரப்பட்டவர்களுக்கும் உதவித் திட்டங்களை வழங்கவுள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது 'மக்களுக்காக மக்கள் பணி' என்ற திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு தேமுதிக சார்பில் உதவிகளை வழங்கப் போகிறாராம்.
தேமுதிக நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் சாலைகளை சீரமைத்தல், வழிபாட்டு தலங்களை சுத்தம் செய்தல், பள்ளி கட்டிடங்களுக்கு வெள்ளை அடித்தல், கொசு ஒழிப்பு போன்ற 58 பணிகளை மக்களுக்காக மக்கள் பணி திட்டத்தின் மூலம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் விஜய்காந்த்
இதன்படி விஜயகாந்த் இன்று தனது ஒருமாத சுற்றுப்பயணத்தை திண்டுக்கல்லில் தொடங்குகிறார். இன்று மாலை 5 மணிக்கு திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே தேமுதிக சார்பில் "மக்களுக்காக மக்கள் பணி" திட்டத்தின் கீழ் வறுமை ஒழிப்பு தினக் கூட்டம் நடை பெறுகிறது.
இதில் விஜயகாந்த் கலந்து கொண்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் 1,500 பேருக்கு உதவிகளை வழங்குகிறார். இதில் பண்ருட்டி ராமச்சந்திரன், விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மாநில, மாவட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
இதைத் தொடர்ந்து நாளை தேனி செல்லும் விஜயகாந்த் அங்கு நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவிகளை வழங்குகிறார். நாளை மறுநாள் விருதுநகரில் மாணவர்களுக்கு கல்வி உதவிகளையும், 4ம் தேதி தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவிகளை வழங்குகிறார்.
5ம் தேதி கன்னியாகுமரியிலும், 6ம் தேதி திருநெல்வேலியிலும் கிருஸ்துவ ஆலயங்கள் மற்றும் பாதிரியார்களுக்கு உதவிகள் வழங்குகிறார். அன்றைய தினம் தேமுதிக சார்பில் அணுசக்தி எதிர்ப்பு நாளும் கடைபிடிக்கப்படுகிறது.
7ம் தேதி ராமநாதபுரத்தில் ஆட்டோ, மாட்டுவண்டி ஓட்டுபவர்களுக்கு விஜயகாந்த் உதவி வழங்குவாராம்.
8ம் தேதி சிவகங்கையில் சமையல் கலைஞர்கள், கட்டிட தொழிலாளர்களுக்கும், 9ம் தேதி புதுக்கோட்டையில் இஸ்லாமிய உலமாக்களுக்கும், 10ம் தேதி தஞ்சாவூரில் விவசாயிகளுக்கும், 11ம் தேதி திருவாரூரில் கைவினை கலைஞர்களுக்கும், 12ம் தேதி நாகப்பட்டினத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், இளம் பெண்களுக்கும்,
13ம் தேதி அரியலூரில் துப்புரவு தொழிலாளர்களுக்கும், 14ம் தேதி பெரம்பலூர் நரிக்குறவர்களுக்கும், 15ம் தேதி திருச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் விஜயகாந்த் உதவி வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
16ம் தேதி கரூரில் கால்நடைகளுக்கு மருத்துவ உதவி நடத்தும் விஜயகாந்த், 17ம் தேதி நாமக்கல்லில் கால்நடை மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் வழங்குவார்.
18ம் தேதி சேலத்தில் பழங்குடியின மக்களுக்கும் 19ம் தேதி கிருஷ்ணகிரியில் முதியோருக்கும், 20ம் தேதி தருமபுரியில் இலவச மருத்துவ உதவிகளும், 21ம் தேதி திருப்பூரில் தொழிலாளர்களுக்கும், 22ம் தேதி நீலகிரியில் தேயிலை தொழிலாளர்களுக்கும்,
23ம் தேதி கோவையில் சித்தா, ஆயுர்வேத மருத்துவ உதவிகளையும், 24ம் தேதி ஈரோட்டில் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கும், 25ம் தேதி மதுரையில் தனது பிறந்த நாள் விழாவையும் நடத்தும் விஜயகாந்த் தமிழ் ஆர்வலர்களுக்கு உதவிகள் வழங்கப் போகிறார்.
26ம் தேதி கடலூரில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு உதவிகளையும், 27ம் தேதி வேலூரில் விளையாட்டு போட்டிகள் நடத்தி வீரர்களுக்கு உதவிகளையும், 28ம் தேதி திருவண்ணாமலையில் கோவில்கள், இந்து குழுக்களுக்கு உதவிகள் வழங்கி,
29ம் தேதி திருவள்ளூரில் சிறைச் சாலையில் உள்ள கைதிகளின் குடும்பங்களுக்கும், 30ம் தேதி தேதி விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கும் விஜய்காந்த் உதவிகளை வழங்கவுள்ளார்.
31ம் தேதி காஞ்சீபுரத்தில் நெசவாளர்களுக்கும், செப்டம்பர் 1ம் தேதி சென்னையில் குழந்தைகளுக்கும் உதவிகளை வழங்கி தனது சுற்றுப் பயணத்தை விஜய்காந்த் முடிக்கவுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications