திமுக-காங்கிரஸைச் சேர்ந்த 60 பேர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்
சென்னை: நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 60 பேர் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இது குறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் நீலகிரி மாவட்டத்தில், திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சுயேச்சை உள்ளாட்சி பிரதிநிதிகளான தூனேரி ஊராட்சி மன்ற தலைவர் கே.மகேஷ், எப்பநாடு ஊராட்சி மன்ற தலைவர் டி.ராஜு, கடநாடு ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், இத்தலார் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பிரேமலதா, பாலகொலா ஊராட்சி மன்ற தலைவர் எம்.மணி, குஞ்சப்பணை ஊராட்சிமன்ற தலைவர் எஸ்.கிருஷ்ணம்மாள் ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர்.
இதேபோல ஜெகதளா பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் லட்சுமி, அதிகரட்டி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெ.ஹரிகரன், உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியக்குழு 2வது வார்டு உறுப்பினர் எல்.பெள்ளி போஜன், 14வது வார்டு உறுப்பினர் ஆர்.சர்மிளா, 8வது வார்டு உறுப்பினர் துரைராஜ், நெல்லியாளம் நகர மன்ற 7வது வார்டு உறுப்பினர் வி.ஜெயசந்திரன், 8வது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் லோகேஸ்வரி, 19வது வார்டு திமுக உறுப்பினர் டி.முத்துக்குமார், சோலூர் பேரூராட்சி மன்ற 3வது வார்டு உறுப்பினர் சின்னப்பன், 4வது வார்டு உறுப்பினர் சிவகாமி, 11வது வார்டு உறுப்பினர் சாந்தி, 14வது வார்டு உறுப்பினர் வனஜா, ஜெகதளா பேரூராட்சி மன்ற 10வது வார்டு திமுக உறுப்பினர் டி.விஜயலட்சுமி, 11வது வார்டு உறுப்பினர் காணிக்கராஜ் என்ற கிரி, 14வது வார்டு உறுப்பினர் எம்.சுரேஷ், கேத்தி பேரூராட்சி மன்ற 4வது வார்டு உறுப்பினர் ஏ.கொங்கன், 18வது வார்டு உறுப்பினர் ராஜேஷ், அதிகரட்டி பேரூராட்சி மன்ற 3வது வார்டு உறுப்பினர் ஆர்.சென்னையா, உலிக்கல் பேரூராட்சி 15வது வார்டு உறுப்பினர் சி.கமல், 17வது வார்டு திமுக உறுப்பினர் பி. ராமலிங்கன் மற்றும் கக்குச்சி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆலன் ஆகியோர் அதிமுகவில் சேர்ந்தனர்.
தொட்டபெட்டா ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கருப்புசாமி என்ற சி.ஏ.மூர்த்தி, கடநாடு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பி.பொன்னன் மற்றும் தூனேரி ஊராட்சி மன்ற 7வது வார்டு உறுப்பினர் தவமணி, தும்மனட்டி ஊராட்சி மன்ற 9வது வார்டு உறுப்பினர் சண்முகம் உட்பட 31வது வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட 60 பேர் தங்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர். அதிமுகவில் இணைந்தவர்களை முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தி வரவேற்று, அவர்களுக்கு அதிமுக உறுப்பினர் உரிமை சீட்டுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் மு.சு.அர்ஜுனன் உடன் இருந்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications