என் காதலிக்கு இன்னொரு காதலனா.. முதல் காதலன் தூக்கில் தொங்கி சாவு!
சென்னை: தனது காதலிக்கு மேலும் ஒரு காதலன் இருப்பதை அறிந்த முதல் காதலன் மனம் உடைந்து தூக்கில் தொங்கி உயிரை விட்டார். சென்னையில்தான் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது.
நல்ல காதலோ அல்லது கள்ளக்காதலோ கொலையும், தற்கொலையும் சகஜமாகி வருகிறது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் சதீஷ். வயது25. எம்.பி.ஏ படித்தவர். தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் காதலில் விழுந்தார் சதீஷ். இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர், இன்று நேற்றல்ல, கடந்த 5 வருடமாக.
விழுந்து விழுந்து, உருகி உருகி இருவரும் காதலித்து வந்துள்ளனர். தினசரி பல மணிநேரம் செல்போனிலேயே காதலை வளர்த்து வந்தனர். ஆனால் சமீப காலமாக அந்தப் பெண் திடீரென சதீஷுடன் பேசுவதை குறைக்க ஆரம்பித்து விட்டார். ஒரு கட்டத்தில் பேச்சையே நிறுத்தி விட்டார். இதனால் குழப்பமடைந்தார் சதீஷ்.
என்ன நடந்தது என்று தெரியாமல் குழம்பினார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது காதலி, இன்னொருவருடன் பைக்கில் படு நெருக்கமாக உட்கார்ந்து பயணம் செய்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து தனது காதலிக்கு போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவே இல்லை. இதனால் தனது காதலி இன்னொரு காதலனைப் பிடித்து விட்டதாக அதிர்ச்சி அடைந்த அவர் கவலையுடனும், வேதனையுடனும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று திடீரென மாலையில் தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.
போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications