கர்நாடகத்தில் கனமழை: கபினி அணை வேகமாக நிரம்புகிறது.. மேட்டூர் அணைக்கு நீர்த் திறப்பு
பெங்களூர்: கர்நாடகத்தில் காவிரி நதியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதைத் தொடர்ந்து கபினி அணையிலிருந்து உபரி நீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது.
கர்நாடகத்தில் இந்த ஆண்டு பருவ மழை மிகத் தாமதமாக பெய்யத் தொடங்கியுள்ளது. தாமதமானாலும் தற்போது கன மழை பெய்து வருகிறது. முதலில் வட கர்நாடகத்தில் மட்டுமே தொடர் மழை பெய்தது. இதனால் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகள் வறண்டே கிடந்தன.
இந் நிலையில் காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டத்திலும், ஹாசன் உள்ளிட்ட மத்திய மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தலைக் காவிரியிலும், பாகமண்டலா உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை கொட்டுகிறது. இந்த மழை காரணமாக காவிரியில் வெள்ள நீர் வந்து சேர ஆரம்பித்துள்ளது.
இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணை உள்ளிட்ட முக்கிய அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 124 அடி உயர கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 88.90 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 18,967 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
அதே போல பத்ரா, ஹேமாவதி, துங்கா ஆகிய 3 ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கபினி, காஜனூர், ஹேமாவதி, ஹாரங்கி உள்ளிட்ட அணைகளும் நிரம்புகின்றன.
கபினி அணைக்கு வினாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 2280.58 அடியைத் தாண்டிவிட்டது. அணை நிரம்ப 4 அடியே மிச்சமுள்ள நிலையில் உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சில நாட்கள் கனமழை நீடித்தால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி உபரி நீர் முழுவதும் மேட்டூர் அணைக்கு வந்து சேரும்.
காவிரியில் ஜூன், ஜூலை மாதத்தில் தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடகம் இதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் அணைகள் நிரம்பி வருவதையடுத்து வேறு வழியில்லாமல் உபரி நீரைத் திறந்துவிடவுள்ளது.
கேரளத்தில் மதகுகள் இயங்காததால் பழசி அணை உடையும் அபாயம்:
இந் நிலையில் கேரளாவிலும் கன மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக பெய்யும் கன மழை காரணமாக வயநாடு மலைப் பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கண்ணனூர் மாவட்டத்தில் உள்ள பழசி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், மதகுகளை திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், மோட்டார்களில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மதகுகள் இயங்கவில்லை.
தொடர்ந்து வெள்ள நீர் வந்து கொண்டே இருக்கும் நிலையில் மதகுகள் இயங்காததால் அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மதகுகளை இயக்க ராணுவத்தின் உதவியை கேரள அரசு நாடியுள்ளது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications