சாரல் இல்லாத குற்றாத்தில் இன்று சாரல் விழா துவக்கம்

குற்றால்த்தில் சாரல் திருவிழா இன்று மாலை 6 மணிக்கு துவங்குகிறது. குற்றாலம் கலைவாணர் அரங்கில் துவங்கும் விழாவுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துறை தலைவர் முருகையா பாண்டியன் முன்னிலை வகிக்கிறார். தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் விழாவை தொடங்கி வைக்கிறார்.
எம்.பி.க்கள் லிங்கம், தங்கவேலு, ராமசுப்பு, எம்.எல்.ஏ.க்கள் சரத்குமார், துரையப்பா, நயினார் நாகேந்திரன், இசக்கி சுப்பையா, பிசி ராஜேந்திரன், முத்துசெல்வி, நாராயணன், பேரூராட்சி தலைவர் லதா அசோக் பாண்டியன், துணை தலைவர் கணேஷ் தமோதரன், உறுப்பினர் குமார் பாண்டியன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். துவக்க நாளான இன்று மாலை அரசு இசை பள்ளி மாணவ, மாணவிகளின் இசை சங்கமம், முன்னதாக 5 மணிக்கு கலைமாமணி திருநங்கை நர்ததகி நடராஜ் நடன குழுவினரின் தமிழ் அமுது நடன நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு சென்னை லஷ்மன் ஸ்ருதி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.
சாரல் திருவிழாவை முன்னி்ட்டு நாளையும், நாளை மறுநாளும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. நாளை காலை 10 மணிக்கு நீ்ச்சல் போட்டியும், 11 மணி்க்கு படகு போட்டியும் நடக்கிறது. நாளை மறுநாள்(10ம் தேதி) மாலை 3 மணிக்கு சதுரங்க போட்டியும், 4 மணிக்கு கயிறு இழுத்தல் போட்டியும், மாலை 5 மணிக்கு கோலப்போட்டியும் நடக்கிறது.












Click it and Unblock the Notifications