குற்றாலத்தில் சாரல் திருவிழா துவக்கம்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
நெல்லை: குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் எதிர்பார்த்த சாரல் திருவிழா நேற்று துவங்கியது.
குற்றாலத்தில் சாரல் திருவிழா நேற்று துவங்கியது. குற்றாலம் கலைவாணர் அரங்கில் நடந்த துவக்கவிழா நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். கோட்டாட்சியர் ராஜகிருபாகரன் வரவேற்புரையாற்றினார். தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்கள் சரத்குமார், நாராயணன், முததுசெல்வி, பேரூராட்சி தலைவர் லதா அசோக் பாண்டியன், துணை தலைவர் கணேஷ் தமோதரன், கவுன்சிலர் குமார் பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர்.
விழாவில் அமைச்சர் செந்தூர் பாண்டியன் பேசுகையில், குற்றாலம் அருவிகளில் அரியவகை மூலிகைகள் கலந்த தண்ணீர் விழுவதால் தான் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகிறார்கள். குற்றாலத்திற்கு எத்தனை லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தேவையான பாதுகாப்பை முதல்வர் ஜெயலலிதா வழங்குவார். குற்றாலத்தில் எந்தவிதமான அத்துமீறல்களுக்கும் இடமில்லாமல் மகிழ்ச்சியாக குடும்பத்துடன வந்து செல்லலாம். சுற்றுலாப் பயணிகள் சீசனை அனுபவிப்பதுடன் சாரல் திருவிழாவை கண்டு மகிழ வேண்டும் என்றார்.
சரத்குமார் பேசுகையில், குடும்பத்துடன் பொழுது போக்குவதற்கும், சுற்றுலா செல்வதற்கும் குற்றாலம் ஏற்ற வகையில் உள்ளது. தென்காசியில் ரிங் ரோடு விரைவில் அமைக்கப்படும். அருவிக்கரை பகுதியை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குற்றாலத்தில் சுற்றுலா தரத்தை உயர்த்தும் வகையில் ஐந்தருவியில் 6 கோடி ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்படுகிறது என்றார்.
நேற்று மாலை துவங்கிய திருவிழா நாளையுடன் முடிகிறது என்பது குறி்ப்பிடத்தக்கது. திருவிழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications