விளையாட்டு அரங்கம் இடிந்து 10 பேர் பலி விவகாரம்: ஜேப்பியார் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்து 10 வட மாநிலத் தொழிலாளர்கள் பலியான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜேப்பியார் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி பொறியியல் கல்லூரியின் நிறுவனர் ஜேப்பியாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை அருகே உள்ள சுங்குவார்சத்திரம், குன்னம் கிராமத்தில் ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி செயல்பட்டு வருகின்றது. கல்லூரியின் கூடைப்பந்து உள் விளையாட்டு அரங்கம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த திங்கள்கிழமை கட்டிடத்தின் தூண் சரிந்து விழுந்ததில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 50 வட மாநிலத் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதில் ஒரிசா, அஸ்ஸாம் மாநிலங்களைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் 6 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலியாயினர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சுங்குவார்சத்திரம் போலீசார் கட்டிடப் பொறியாளர்கள் ராஜ்குமார், அன்புரோஸ், மேஸ்திரி சதானந்தம், கல்லூரியின் இயக்குனரும், ஜேப்பியார் மருமகனுமான மரியவில்சன் ஆகிய 4 பேரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். அதே போல ஜேப்பியார் மீதும் வழக்குப் பதிவு செய்து அவரையும் வேலூர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஜேப்பியார் தரப்பில் அவரது வழக்கறிஞர் ஜெகதீஸ் சந்திரா, காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் எண் 2ல் நேற்று ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவர் வாதிடுகையில், கல்லூரி நிறுவனர் சம்பவ இடத்தில் இல்லை. எனவே, இந்த விபத்துக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்றார்.
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் சம்பத் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஊராட்சி அனுமதி இன்றி, அவசரமாக உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பாதுகாப்பு கவசம் இன்றி வேலை செய்துள்ளனர். தரமற்ற பொருட்களால் கட்டிடம் கட்டியதால் அது இடிந்து விபத்து நடந்துள்ளது. விபத்துக்கு காரணமானவர்களை ஜாமீனில் விடக் கூடாது என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சோமசேகர், ஜேப்பியாருக்கு சமூகத்தில் அதிகார பலம் இருப்பதால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்பதால் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications