உறவுக்கு வர மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு!
Subscribe to Oneindia Tamil
ஜமத்ரா, ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் உறவுக்கு வர மறுத்த பெண் மீது ஆத்திரமடைந்த இரண்டு இளைஞர்கள் அந்தப் பெண் மீது ஆசிட் ஊற்றி வெறித்தனமாக நடந்து கொண்டனர். இதில் அந்தப் பெண் படுகாயமடைந்தார்.
ஜமத்ரா என்ற மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு வயது 24, திருமணமானவர். ஞாயிற்றுக்கிழமை இப்பெண் தனது வீடு அருகே உள்ள குளப் பகுதியில் இயற்கை அழைப்புக்காக ஒதுங்கியபோது இரண்டு இளைஞர்கள் அங்கு வந்து உறவுக்கு வற்புறுத்தியுள்ளனர். அதற்கு அப்பெண் மறுத்துள்ளார். இதையடுத்து அவர்கள் அப்பெண் மீது ஆசிட் வீசி விட்டு ஓடி விட்டனர்.
பலத்த தீக்காயத்தால் படுகாயமடைந்த நிலையில் அப்பெண் துடித்தார். அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்பெண் கொடுத்த புகாரின் பேரில், அந்த இரண்டு வாலிபர்கள் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications