கணவருககு தெரியாமல் 2வது திருமணம்: பெண், விஏஓ உள்பட 11 பேருக்கு வலை
தூத்துக்குடி: வெளிநாடு சென்ற கணவர் திரும்பி வருவதற்குள் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட பெண் என்ஜினியர் உள்பட 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி மகன் பெருமாள்சாமி. இவருக்கும் இவரது உறவினரான கோவில்பட்டி பக்கமுள்ள நாலாட்டின்புதூரைச் சேர்ந்த அய்யாலுசாமி மகள் கீதாவுக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்கள் திருமணத்தை பதிவு செய்து கொண்டு சென்னையில் தனிக்குடிதனம் நடத்தி வந்தனர். கீதா என்ஜினியர் என்பதால் அங்கு ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார்.
இதையடுத்து பெருமாள்சாமி துபாயில் வேலை கிடைத்து அங்கு சென்றுள்ளார். இதற்கிடையே தனது பெற்றோர் ஆலோசனைப்படி கீதா தனது உறவினரான அருண் குமாரை தூத்துக்குடி சிவன் கோவிலில் வைத்து கடந்த 30.1.2012 அன்று திருமணம் செய்து கொண்டார். கீதாவுக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை என நாலாட்டின்புதூர் வி.ஏ.ஓ. ராஜேந்திரன் என்பவர் சான்று அளித்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த பெருமாள்சாமி துபாயில் இருந்து திரும்பி வந்துள்ளார். மேலும் அவர் கீதாவின் பெற்றோரிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பெருமாள்சாமியை மிரட்டி விரட்டியுள்ளனர். இதையடுத்து அவர் தூத்துக்குடி எஸ்.பி. ராஜேந்திரனிடம் புகார் அளித்தார். அதில், கீதா தன்னை திருமணம் செய்து கொண்டதை மறைத்து வேறொருவரை மணந்துள்ளதாகவும், அவருக்கு தான் கொடுத்த 40 பவுன் நகையை மீட்டு தரும்படியும், இதனை கேட்க சென்ற தன்னை கொன்று விடுவதாக மிரட்டியது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசாரித்த அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன், எஸ்.ஐ. ஞானசெல்வம் ஆகியோர் கீதா, அவரது பெற்றோர் அய்யாலுசாமி, குருவம்மாள், 2வது கணவர் அருண் குமார், அவரது பெற்றோர் காசி, லட்சுமி, அண்ணன் ராஜ்குமார், கீதாவுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை என போலி சான்றிதழ் கொடுத்த நாலாட்டின்புதூர் வி.ஏ.ஓ. ராஜேந்திரன், பதிவு திருமணத்திற்கு சாட்சியாக இருந்த ராஜகோபால், ராமசந்திரன் மற்றும் பழனிச்சாமி உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications