இஸ்ரேல் சிறையில் இருக்கும் கணவரின் உயிரணுவை கடத்தி குழந்தை பெற்ற பாலஸ்தீன பெண்
ரமல்லா: இஸ்ரேல் நாட்டு சிறையில் இருக்கும் தனது கணவரின் உயிர் அணுவை கடத்தி வந்த பாலஸ்தீன பெண் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அம்மர் அல் ஜப்ன்(37) என்பவர் ஹமாஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டு இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி தல்லல் ஜிபென்(32). அவர்களுக்கு பஷாயெர் என்ற மகள் உள்ளார்(16). பஷாயெர் 18 மாதக் குழந்தையாக இருந்தபோது அம்மர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 32 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜிபெனுக்கு தன் கணவர் மூலம் மகன் பிறக்க வேண்டும் என்று ஆசை. இதையடுத்து அவர் சிறையில் உள்ள தனது கணவரின் உயிரணுவை கடத்தி வந்து செயற்கை கருத்தரிப்பு முறைப்படி கர்ப்பமானார். இந்நிலையில் அவருக்கு நேற்று பிரசவ வலி வந்தது. இதையடுத்து நப்லஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு முஹன்னத் என்று பெயரிட்டுள்ளனர்.
தாயும், சேயும் நலமாக உள்ளதாக டாக்டர் சலிம் அபு ஹைசரான் தெரிவித்தார்.
இது குறித்து ஜிபென் கூறுகையில்,
எனக்கு ஆண் குழந்தை பிறந்ததில் மிகவும் மகிழ்ச்சி. அவன் வளர்ந்து என்னையும், அவனது சகோதரியையும் பார்த்துக் கொள்வான் என்றார்.
இஸ்ரேல் சிறையில் 4,700 பாலஸ்தீனியர்கள் உள்ளனர். அவர்களில் 500 பேர் ஆயுள் தண்டனைக் கைதிகள் ஆவர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications