மகாராஷ்டிராவில் காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை குத்திக் கொன்ற மாணவன்
மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த ஆந்திர மாணவியை சக மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.
ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள சுக்கர்லா கிராமத்தைச் சேர்ந்தவர் கோமல்(19). அவர் மகாராஷ்டிராவில் உள்ள நாந்தேடுவில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். அந்த கல்லூரியில் படிக்கும் நாந்தேடு மாவட்டம் மத்கேட்டைச் சேர்ந்த பிரதீப்(20) என்பவர் கோமலை காதலித்துள்ளார். அவர் தனது காதலை தெரிவித்தபோது கோமல் அதை ஏற்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் சம்பவத்தன்று கல்லூரி வளாகத்தில் கோமலைப் பார்த்த பிரதீப் அவரிடம் வந்து தன் காதலை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் கோமல் அவரது காதலை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோமலின் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பிரதீப் அந்த கத்தியை வைத்து தனது கையில் உள்ள நரம்புகளை அறுத்து கோமலி்ன் உடல் அருகே விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோமலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு போராடிய பிரதீப்பை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் பிரதீப் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications