மேற்கு தொடர்ச்சி மலையில் 3வது நாளாக எரியும் காட்டு தீ-அரிய வகை மூலிகை செடிகள் நாசம்

நெல்லை மாவட்டம், புளியங்குடியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை செல்லும்புளி பீட்டில் நேற்று முன்தினம் திடீரென காட்டு தீ பிடித்தது. காற்றின் வேகத்தால் தீ, நாராணபுரம் பீ்ட் பகுதிக்கும் பரவியது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். குறைந்த அளவிலான வேட்டை தடுப்பு காவலர்கள் மூலம் தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் காற்று வேகமாக வீசி வருவதால் இன்று 3வது நாளாக தொடர்ந்து தீ எரிந்து வருகிறது.
நேற்று காலை புளியங்குடி வனசரகம் ஆர்தர்ராஜா, வனவர் முருகையா, வன காப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், சிவகரி வனசரக ஊழியர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அரை கி.மீ தூரத்திற்கு தீ படர்ந்து எரிவதால், அவர்களால் நெருங்க முடியவில்லை. இருப்பினும் தீயை அணைக்க தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
காட்டு தீயில் அரிய வகை மூலிகைகள் மற்றும் தாவரங்கள் எரிந்து நாசமாயின. மேலும் கோட்டைமலை பீட் அருகே உள்ள சோலைக்காடு பகுதியில் மூங்கில் மரங்களும், கோரப்பள்ளம் பகுதியில் தேங்கு, வேங்கை உள்ளிட்ட மரங்களும் தீயில் கருகின.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications