வேலூரில் தேசிய கொடி தலைகீழாக பறக்கவிடப்பட்டதா?-மேயர் மறுப்பு
வேலூர்: வேலூர் மாநகாட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மேயர் கார்த்தியாயினி ஏற்றிய தேசிய கொடி தலைக்கீழாக பறப்பது போன்று காட்சி அளித்தது. ஆனால் தேசிய கொடி தலைக்கீழாக பறக்கவில்லை என்று வேலூர் மேயர் மறுத்துள்ளார்.
நாட்டின் 66வது சுதந்திர தின விழாவையொட்டி நேற்று காலை 9.30 மணியளவில், வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. இதில் வேலூர் மேயர் கார்த்தியாயினி, துணை மேயர் வி.டி.தர்மலிங்கம், கமிஷனர் சீனி அஜ்மல்கான், மாநகர் நல அலுவலர் பிரியம்வதா மற்றும் மண்டல அதிகாரிகள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் மேயர் கார்த்தியாயினி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது கொடி தலைகீழாக பறப்பது போன்ற காட்சி அளித்தது. இதை கண்டு அதிருப்தி அடைந்த மேயர், கொடியை கம்பத்தில் கட்டிய ஊழியர்களை கண்டித்தார். அதன்பிறகு தேசிய கொடியை கீழே இறக்கிய ஊழியர்கள், சரியாக ஏற்றி பறக்கவிட்டனர். சுதந்திர தின விழாவில், தேசிய கொடி தலைக்கீழாக பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தேசிய கொடி தலைக்கீழாக பறந்த சம்பவத்தை வேலூர் மேயர் மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
நேற்று காலையில் நான் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சுதந்திர தின விழாக்களில் கலந்து கொண்டேன். மாநகராட்சி வளாகத்தில் நான் தேசிய கொடியை ஏற்றிய போது, கயிற்றின் முடிச்சு அறுந்திருந்தது. இதனால் கொடி தலைக்கீழாக பறப்பது போல காட்சி அளித்தது.
இதையடுத்து சில நிமிடங்களில் ஊழியர்கள் கொடியை சரி செய்து பறக்கவி்ட்டனர். ஆனால் கொடியை கீழாக பறக்கவிட்டதாக, சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இது போன்ற தவறான வதந்திகளை பரப்புபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications