ஆப்பிள் நிறுவனரான மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் பொருட்களை கொள்ளையடித்தவன் சிக்கினான்

சான்பிரான்சிஸ்கோ நகரில் ஸ்டீவ் ஜாப்ஸ் வசித்து வந்த வீடு தற்போது பூட்டப்பட்டிருக்கிறது. அவரது மனைவி வேறொரு வீட்டில் குடியிருந்து வருகிறது. இந்நிலையில் திருடன் டோசி கரெம் மெக்பர்லின் என்பவன் பூட்டிக் கிடந்த ஸ்டீவ் ஜாப்ஸ் வீட்டுக்கு குறி வைத்து உள்ளே நுழைந்திருக்கிறான். ஸ்டீவ் ஜாப்ஸ் பயன்படுத்திய ஐபேட், ஐ போன்கள் உள்ளிட்ட் 65ஆயிரம் டாலர் மதிப்பிலான பொருட்களை திருடி கொண்டு சென்றுவிட்டான்.
எடுத்துச் சென்ற பொருட்களை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மனமில்லாமல் ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறான். ஸ்டீவ் ஜாப்ஸின் சர்வரை ரீ இன்ஸ்டால் முயற்சியில் இறங்கிய போது அது ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு சொந்தமானது என்று காட்டிக் கொடுத்திருக்கிறது.
இந்நிலையில் ஸ்டீவ் ஜாப்ஸ் வீட்டுப் பொருட்களைத் திருடியவனைத் தேடிய போலீசாருக்கும் சர்வரிலிருந்து வந்த தகவல்கள் உதவின. இதையடுத்து பின்னர் சந்தேக நபரான டோசியின் கலிபோர்னியா குடியிருப்புக்குச் சென்று களவுபோன ஸ்டீவ் ஜாப்ஸுக்கு சொந்தமான அத்தனை பொருட்களையும் கைப்பற்றியிருக்கின்றனர்.
தாம் திருடியது ஸ்டீவ் ஜாப்ஸ் வீடுதான் என்பது அந்தத் திருடனுக்கும் தெரியாதாம். தாம் இதேபோல் சான்பிரான்சிஸ்கோ பகுதிகளில் நான்கைந்து வீடுகளில் களவாடியதையும் அவன் ஒப்புக் கொண்டிருக்கிறானாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications