காசு போட்டு வாங்கிய மார்பகங்கள் உடைஞ்சு போச்சு...கண்ணீர் விடும் சகோதரிகள்!

எல்லாவற்றுக்கும் இப்போது இன்ஸ்டன்ட் வந்து விட்டது. இன்ஸ்டன்ட் இட்லி, உப்புமா போல மார்பகம் சரிவர இல்லாதவர்கள் செயற்கையாக அதைப் பொருத்திக் கொள்ளும் வசதி வந்து விட்டது. இதற்கான அறுவைச் சிகிச்சை மேற்கத்திய நாடுகளில் வெகு பிரசித்தம்.
இப்படி பெரும் பொருட் செலவில் செயற்கை மார்பகத்தைப் பொருத்திய மூன்று இங்கிலாந்துப் பெண்களுக்கு அந்த செயற்கை மார்பகம் சிதைந்து போனதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மூன்று பேருமே சகோதரிகள் ஆவர். கடந்த டிசம்பர் மாதம்தான் இந்த செயற்கை மார்பகத்தை அவர்கள் பொருத்தியுள்ளனர். அதற்குள் அது புஸ்ஸென்று போய் விட்டதாம்.
இவர்களின் இந்த நிலைக்கு பிரான்ஸைச் சேர்ந்த பிஐபி எனப்படும் பாலி இம்பிளான்ட் புரோதீஸ் என்ற நிறுவனத்தின் செயற்கை மார்பகமே காரணம். இந்த செயற்கை மார்பகம் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக ஏற்கனவே இங்கிலாந்தில் சர்ச்சை வெடித்தது. இந்த மார்பகங்களை இங்கிலாந்தில் மட்டும் கிட்டத்தட்ட 47,000 பேர் பொருத்தியுள்ளனர். ஆனால் அவர்களில் பலரும் பல்வேறு உடல் உபாதைகளை சந்தித்து வருகின்றனர்.
இவர்களில் மூவரான சகோதரிகள் டெப்பி பியர்ஸ், கேத்தி பெர்க்ஸ் மற்றும் அமன்டா மெக்மர்ட்ரி ஆகியோர் பிஐபி செயற்கை மார்பகத்தைப் பொருத்துவதற்கான அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டனர். இதற்காக மூன்று பேரும்மொத்தமாக 20,000 பவுண்டு வரை செலவிட்டுள்ளனர். ஆனால் தற்போது மூன்று பேருக்குமே செயற்கை மார்பகம் சிதைந்து போய் விட்டதாம்.
33 வயதான கேத்தியின் உடலுக்குள் சிலிக்கான் திரவம் ஊடுறுவி விட்டது. அதேபோல 30 வயதான டெப்பிக்கும் தோல் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
31 வயதான அமன்டாவுக்கும் இதேபோல சிலிக்கான் ஒழுகும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மீண்டும் ஒரு அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு பழைய சிலிக்கானை மாற்றியுள்ளார்.
ஆரம்பத்தில் எடுப்பான செயற்கை மார்பகத்துடன் மூன்று சகோதரிகளும் பெருமை பொங்க ஊரை வலம் வந்தனர். ஆனால் தற்போது செயற்கை மார்பகங்கள் புஸ்ஸென்று போய் விட்டதால் மூவருமே பெரும் வருத்தத்தி்ல உள்ளனர்.
இப்படிப்பட்ட தரக்குறைவான செயற்கை மார்பகங்களால் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டு வருகிறதாம்.
எப்பவுமே இயற்கைதான் நல்லது, செயற்கை என்று போய் விட்டால் இப்படித்தான் பஞ்சாயத்து வரும்...












Click it and Unblock the Notifications