வடகிழக்கு மாநிலத்தவர் வெளியேறுதல் எதிரொலி: மொத்தமாக எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். அனுப்ப தடை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வன்முறை பய்ததில் வடகிழக்கு மாநிலத்தவர்கள் பெங்களூர், ஹைதராபாத்தில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மொத்தமாக எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்ப தடைவிதிப்பதாக மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் அறிவி்த்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் மீது ஆகஸ்ட் 20ம் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தி நேற்று முன்தினம் திடீரென பரவியது. செல்போன் எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக், டிவிட்டரில் இந்த வதந்தி காட்டுத் தீயாகப் பரவியது. இதையடுத்து 5,000க்கும் மேற்பட்ட வடகிழக்கு மாநிலத்தவர்கள் பெங்களூரில் இருந்து ரயில் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பிவிட்டனர். மேலும் பலர் சென்று கொண்டிருக்கின்றனர்.

இதே போன்று ஹைதராபாத்தில் வசிக்கும் வடகிழக்கு மாநிலத்தவர்களும் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதையடுத்து வதந்திகள் பரப்புவதை தடுக்க மொத்தமாக எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று முதல் 15 நாட்களுக்கு அமலில் இருக்கும்.

இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இந்த வதந்தியைப் பரப்பியது யார் என்பதை நாங்கள் நிச்சயம் கண்டுபிடிப்போம். பெங்களூரில் வதந்தியைப் பரப்பியவர்கள் தப்பிக்க முடியாது. பெங்களூரில் வடகிழக்கு மாநிலத்தவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக கர்நாடக முதல்வரும், போலீஸ் கமிஷனரும் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு மாநிலத்தவர்கள் சந்தித்து அவர்கள் பெங்களூரில் பாதுகாப்பாகத் தான் இருக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் பெங்களூரை விட்டு வெளியேறவில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+