போலி ஜாதிச் சான்றிதழ் கொடுத்து தேர்தலில் போட்டியிட்ட திமுக கவுன்சிலர் சிக்கினார்
வேலூர்: வேலூர் மாநகராட்சி 4வது வார்டு திமுக கவுன்சிலர் ரவிக்குமார், தேர்தலின் போது போலி ஜாதிச் சான்றிதழ் கொடுத்தது போட்டியிட்டது உறுதியாகி உள்ளதால், அவரது பதவி விரைவில் பறிக்கப்பட உள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில், வேலூர் மாநகராட்சி 4வது வார்டு, இந்து ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் திமுகவை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளர் குமார், கடந்த 2011 நவம்பர் 2ம் தேதி, மாநில தேர்தல் கமிஷனுக்கு ஒரு புகார் மனு அனுப்பினார்.
இதில் ரவிக்குமார் இந்து ஆதி திராவிட அல்ல. அவர் ஆதி திராவிடக் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். போலி ஆவணங்களை அளித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி உள்ளார். எனவே அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது. மாவட்ட கலெக்டரின் விசாரணையில் ரவிக்குமார் மீதான புகார் உண்மையானது என்று தெரியவந்தது. மேலும் ரவிக்குமாரை தகுதி நீக்கம் செய்ய மாநில தேர்தல் கமிஷனுக்கு, மாவட்ட கலெக்டர் அஜய் யாதவ் பரிந்துரைத்தார்.
இதையடுத்து திமுக கவுன்சிலர் ரவிக்குமார் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு தேர்தல் கமிஷன் கடந்த 6ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து விரைவில் கவுன்சிலர் ரவிக்குமார் மீது அதிரடி நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகின்றது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்











Click it and Unblock the Notifications