மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியல்: மெல்பர்ன் முதலிடம்
உலக அளவில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியலில் ஆஸ்திரேலியா நாட்டின் மெல்பர்ன் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரியாவின் வியன்னா இரண்டாம் இடத்தில் உள்ளது.
உலகளவில் சிறந்த நகரங்களைத் தேர்வு செய்வதற்காக சுமார் 140 நகரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் சுகாதாரம், பண்பாடு, சுற்றுச்சூழல், கல்வி, உள்கட்டமைப்பு போன்ற காரணிகளைக் கொண்டு ஆய்வு நிகழ்த்தப்பட்டது. இந்த ஆய்வில் மெல்பர்ன் நகரம் 100க்கு 97.5 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், வியன்னா நகரம் 97.4 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது. இந்த ஆய்வில் கனடாவில் வான்கூவர் 100க்கு 97.3 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தில் உள்ளது. டொரொண்டோ நான்காவது இடத்தையும்(97.2) பிடித்துள்ளன. ஐந்தாவது இடத்தில் 96.6 மதிப்பெண் பெற்ற கனடாவின் கேல்கரியும், ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டும் இடம்பெற்றுள்ளன. சிட்னி நகரம் 7 வது இடத்தில் உள்ளது. முதல் பத்து இடங்களில் ஆஸ்திரேலியாவின் மூன்று நகரங்கள் இடம் பெற்றுள்ளன என்பது என்பது சிறப்பம்சமாகும்.
ஆசிய கண்டத்தில் உள்ள நகரங்களில் ஜப்பான் நாட்டின் ஒசாக 12 வது இடத்தையும், டோக்கியோ 18 வது இடத்தையும் பிடித்துள்ளது. ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் 52 வது இடத்தை பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் கொழும்பு 133 வது இடத்தையும், கராச்சி 135 வது இடத்தையும் பிடித்துள்ளன. வங்கதேசத்தின் டாக்கா நகரம் 140 வது இடத்தை அதாவது 38.7 மதிப்பெண்கள் பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லிபியாவின் உள்நாட்டுப் போர், கிரீஸில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்றவை அந்த நாடுகளில் உள்ள நகரங்களின் மதிப்பெண்களை குறைத்தன. பல நகரங்களில் மதிப்பெண் குறைந்ததற்கு போர், கலவரம், பொருளாதார நெருக்கடி போன்றவையும் காரணங்களாயின.
இந்த ஆய்வில் மக்கள் வாழவும், மக்கள் விரும்பி வந்து பார்க்கவும் விரும்பிய நகரங்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications