மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்தில் வேதாரண்யத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது.
ஆகஸ்ட் 18ம் தேதியன்று வேதாரண்யத்தில் இருந்து கடலில் 5 பைபர் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 18 தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் குப்புசாமி என்ற மீனவரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற மீனவர்கள் மீது பைப்புகளைக் கொண்டு தாக்கியதில் அவர்களும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தமிழக ஏழை, அப்பாவி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தியுள்ள மற்றொரு மோசமான தாக்குதல் இதுவாகும். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற தாக்குதல்கள் குறித்து ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் இதுவரை அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், தொடர்ந்து எந்த தடையும் இல்லாமல் தாக்குதல் நடந்து கொண்டுதான் உள்ளது.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையினரிடம் மிக மென்மையானப் போக்கை மத்திய அரசு கடைபிடிக்கிறது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்ற இலங்கையின் உறுதி மொழி காகிதத்தில் மட்டுமே உள்ளது.எனவே, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை உடனடியாக நிறுத்தும் வகையில் பிரதமர் இந்த பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய எல்லைப் பகுதிக்குள் பாதுகாப்பாக மீன்பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர்களுக்கு உறுதி செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications