அஸ்ஸாம் இனக்கலவரம்: காங். கூட்டணியை சேர்ந்த போடோலாந்து கவுன்சில் எம்எல்ஏ கைது
குவஹாத்தி: அஸ்ஸாமில் போடோ இனத்தினருக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நடந்த இனக் கலவரத்தைத் தூண்டிவிட்டதாக போடோலாந்து மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார்.
அஸ்ஸாமில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது போடோலாந்து மக்கள் முன்னணி (Bodoland people's Front). இந்தக் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவான பிரதீப் பிரம்மா தான் முதலில் இனக் கலவரத்தையே தூண்டிவிட்டார் என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
இதையடுத்து கோக்ரஜார் மாவட்டத்தில் வைத்து அவரை அஸ்ஸாம் போலீசார் இன்று கைது செய்தனர். இவர் மீது வன்முறையைத் தூண்டியது, இனக் கலவரத்தைத் தூண்டியது என 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அஸ்ஸாமின் போடோலாந்து மாகாண சுயாட்சி கவுன்சிலின் கீழ் வரும் 4 மாவட்டங்களை இந்தக் கட்சி தான் ஆட்சி செய்து வருகிறது. இந்தக் கட்சியின் தலைவராக ஹக்ரமா மிகிலாரி உள்ளார்.
இந்நிலையில் துப்ரி மாவட்டத்தில் நேற்றிரவு பலத்த பாதுகாப்பையும் மீறி இனக் கலவரம் வெடித்தது. இதையடுத்து அங்கும் கோக்ரஜார் மாவட்டத்திலும் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications