நிலக்கரி சுரங்க முறைகேடு: மன்மோகன், கத்காரி வீடுகளை முற்றுகையிட கெஜ்ரிவால் அழைப்பு
டெல்லி: நிலக்கரி சுரங்க முறைகேட்டில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கும் தொடர்பிருப்பதால் பிரதமர் மன்மோகன்சிங், பாஜக தலைவர் நிதின் கத்காரி வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துமாறு அன்னா ஹசாரே ஆதரவாளர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் இன்று கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள பதிவு:
நாட்டை உலுக்கும் ரூ1.86 லட்சம் கோடி நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு தொடர்பிருக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் பாஜக தலைவர் நிதின் கத்காரியின் வீடுகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம். வரும் 26-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணிக்கு டெல்லி ஜந்தர்மந்தரில் அனைவரும் ஒன்று திரளுவோம்.
நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக கடந்த மே மாதம் 25-ந் தேதியே நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம். எங்களது குற்றச்சாட்டுகள் உண்மை என்று இப்போது நிரூபணமாகிவிட்டது. இந்த ஊழலில் அனைத்து கட்சியினருக்கும் தொடர்பிருக்கிறது, அனைத்து சுரங்க ஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications