2 கற்பழிப்பு மற்றும் 2 கொலை... 20 ஆண்டுக்குப் பின் சிக்கிய 'குக்'!
கோலார்: கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் இரண்டு பெண்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலையும் செய்த சமையல்காரர், 20 ஆண்டு தலைமறைவுக்குப் பின்னர் போலீஸில் சிக்கியுள்ளார்.
கோலார் மாவட்டம் கல்லூர் என்ற கிராமத்தில் 1993ம் ஆண்டு ரத்தினம்மா என்ற பெண் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். அதேபோல சென்னப்பள்ளி கிராமத்தில் பத்மம்மா என்ற பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த இரண்டு செயல்களையும் செய்தது சீனா என்கிற சமையல் தொழிலாளிதான் என்று தெரிய வந்தது.
அவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் சீனா சிக்காமலேயே இருந்து வந்தார். கடந்த 20 வருடங்களாக சீனாவைத் தேடும் வேட்டை நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆந்திராவில் உள்ள ஹோட்டலில் சீனா சமையல் வேலை செய்து வந்தது தெரிய வந்தது.
மேலும் சில நாட்களுக்கு முன்பு அவர் ஸ்ரீனிவாசப்பூர் என்ற இடத்திற்கு அருகே ஒரு ஹோட்டலில் இருந்ததும் போலீஸாருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து விரைந்து சென்ற போலீஸார் சீனாவை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
25 வயதில் பலாத்காரம், கொலையைச் செய்து விட்டுத் தப்பிய சீனாவுக்கு தற்போது 45 வயதாகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications