அவதூறு வழக்கு: கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த், ராமதாஸுக்கு நீதிமன்றம் சம்மன்

முதல்வர் கொடநாட்டில் தங்கி இருந்தது குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் மீது சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இது தவிர அதிமுக ஆட்சி குறித்து அறிக்கை வெளியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் மீதும் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
மேலும் தன்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாகக் கூறி சில பத்திரிக்கைகள் மீதும் அவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த அவதூறு வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்குகளை விசாரித்த நீதிபதி பி. கலையரசன் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் முரசொலி ஆசிரியர், ஆகியோரை வரும் அக்டோபர் 10ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் ஜெயலலிதா நாளிதழ்கள் மற்றும் பத்திரிக்கைகள் மீது அவதூறு வழக்கு போடுவது குறித்து விமர்சித்தது தொடர்பான வழக்கில் அக்டோபர் 10ம் தேதி ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
மற்றுமொறு அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் அக்டோபர் 15ம் தேதியும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அக்டோபர் 9ம் தேதிக்குள்ளும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications