தர்மபுரியில் துண்டுகளாக அறுக்கப்பட்ட இறந்த வாலிபர் உடல்-சாக்கு மூட்டையில் கட்டி வீசிய கொடூரம்
தர்மபுரி: தர்மபுரியில் 30 வயது மதிக்கத்தக்க இறந்த வாலிபரின் உடல் துண்டு துண்டாக அறுக்கப்பட்டு, சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. உடலில் தலை, கை, கால் ஆகிய உறுப்புகள் இல்லாததால், கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த பைசுஅள்ளி பகுதியில் சாலையோரத்தில் பழத்தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தின் அருகே சாக்குமூட்டை ஒன்று, போர்வை போர்த்தப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக கிடந்தது. சாக்குமூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியதால், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாக்குமூட்டையை திறந்து பார்த்தனர். அப்போது சாக்குமூட்டையில் துண்டு துண்டாக அறுக்கப்பட்ட வாலிபர் ஒருவரின் உடல் பகுதிகள் இருந்தது. தலை, 2 கைகள், வலது கால் ஆகிய உறுப்புகள் இல்லாததால், கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பது தெரியவில்லை.
30 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர், எதற்காக கொலை செய்யப்பட்டார்? எந்த ஊரை சேர்ந்தவர்? சாக்கு மூட்டையை அங்கே கொண்டு வந்து போட்டது யார்? உடலின் தலை மற்றும் மற்ற பகுதிகள் எங்கே? ஆகியவை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட நபரை விரைவில் கண்டறிய கூடாது என்பதற்காக, அவரது உடலை துண்டு துண்டாக அறுத்துவிட்டு, தலை மற்றும் கை, கால் ஆகிய பகுதிகளை வேறு இடங்களில் எறிந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து காரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications