For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிறந்த குழந்தை பேசியதாக வதந்தி: 4000 குழந்தைகளை பழிவாங்கும் எனவும் பீதி!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

New Born
கிருஷ்ணகிரி: பிறந்த குழந்தை பேசியதாகவும் 4 ஆயிரம் பேரை பழிவாங்குவேன் என்று அந்த குழந்தை தெரிவித்ததாகவும் வதந்தி பரவியதால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பரபரப்பு கிளம்பியுள்ளது. இதனால் பீதி அடைந்துள்ள பொதுமக்கள் தங்களின் குழந்தைகளை பாதுகாக்க பரிகாரபூஜைகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.

எஸ்.எம்.எஸ் மூலம் வதந்தி பரப்புவதும், பீதியை கிளப்புவதும் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. வட கிழக்கு இந்தியர்களுக்கு எதிரான எஸ்.எம்.எஸ் பீதி அடங்கும் முன்போ மெகந்தி பீதி கிளம்பியது. இதனால் தமிழ்நாடு முழுவதும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு விடிய விடிய மருத்துவமனைகளில் குவிந்தனர் பொதுமக்கள். பின்னர் அது வதந்தி என்று தெரிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். நாட்டின் பாதுகாப்பிற்கு சவால் விடும் இத்தகைய எஸ்.எம்.எஸ்களை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு. மேலும் வதந்தியை கிளப்பும் இணைய தளங்கள் முடக்கப்பட்டன.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் தற்போது பிறந்த குழந்தை பேசியதாகவும், அது சாபம் விட்டதாகவும் பரபரப்பு கிளம்பியுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களை விடிய, விடிய, தூங்காமல் செய்து விட்ட அந்த செய்தியின் விபரம் வருமாறு:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் வியாழக்கிழமை மாலை ஒரு ஆண் குழந்தை பிறந்ததாகவும், பிறந்தவுடன் அந்த குழந்தை சிரித்து பின்னர் பேசியதாகவும், அந்த குழந்தை நான் அதிகாலை 4 மணிக்குள் இறந்து விடுவேன், அப்போது நான் 4 ஆயிரம் ஆண், பெண் குழந்தைகளை காவு வாங்குவேன் என்று கூறியதாகவும் தகவல் பரவியது. செல்போன் மூலம் இந்த தகவலை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.

இதனால் குழந்தைகள் வைத்திருக்கும் வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். சிலரின் ஆலோசனைப்படி பெண்கள் தேங்காயில் மஞ்சள், குங்குமம் தடவி, அதை குழந்தையின் தலையை சுற்றி தெருவில் உடைத்தனர். இதையடுத்து பிறந்த குழந்தையுடன் காவு மிரட்டலுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் அது எப்படி செய்ய வேண்டும் என்றும் தகவல் பரவியது.

தர்மபுரி அருகே உள்ள வெங்கிடம்பட்டியில் உள்ள ஒருவருக்கு ஊத்தங்கரை அருகே உள்ள வெங்கடதாம்பட்டியில் இருந்து தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து இந்த பகுதியிலும் தேங்காய் உடைத்து, எலுமிச்சை பழத்தை அறுத்து காவு கொடுத்து உள்ளனர். கோவில்களிலும் குழந்தையின் பெயரில் பெண்கள் அர்ச்சனை செய்தனர். மேலும் சில இடங்களில் ஆண்களை வீட்டிற்கு வெளியே நிற்க வைத்து அவர்களுக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் தேங்காய் உடைத்தும் பரிகாரம் செய்தனர்.

இந்த தகவல் குறித்தும் பரிகார பூஜைகள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள ஊத்தங்கரை தாசில்தார் புகழேந்தி, அப்படி ஒரு குழந்தை பிறக்கவே இல்லை என்று தகவல் தெரியவந்துள்ளதாக கூறினார். இது வதந்தி. இந்த வதந்தியை யாரோ திட்டமிட்டு பரப்பி இருக்கிறார்கள் என்றார். இது பொய்யான தகவல் என்பதால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் குழந்தைகள் வைத்திருக்கும் வீடுகளில் பரிகாரம் செய்து வருகிறார்கள். கிராமங்கள் தோறும் முச்சந்தியில் தேங்காய் உடைக்கப்பட்டும், எலுமிச்சை பழம் அறுக்கப்பட்டும், மஞ்சள், குங்குமம் தெளிக்கப்பட்டும் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பிறந்த குழந்தை பேசியதாக கூறப்பட்ட சம்பவம் குறித்தே பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

English summary
A rumour on new born child created panic among the people in Krishnagiri district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X